SAITM வைத்தியர்களும் SLMC யில் பதியலாம்

medical doctorகொழும்பு: மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் SAITM (South Asian Institute of Technology and Medicine) கல்வி கற்று பட்டம் பெறுவோர், இலங்கை மருத்துவ சங்கத்தில் (SLMC) தங்களை பதிவு செய்யலாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழகம், சட்டபூர்வமானதா இல்லையா என்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பில் உச்ச நீதிமன்றில் இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையில் இன்று (31) வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலபே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மல்ஷானி சுரவீரஆரச்சி, திலும் சூரியஆரச்சி இரு மாணவிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், தங்களை வைத்தியர்களாக பதிவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.

இம்மனுவின் பிரதிவாதிகளாக, வைத்தியச சங்கம், உயர் கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்

குறித்த வழக்கின் தீர்ப்பில், குறித்த தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களையும், மருத்துவர்களாக பதிவு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று (31) காலை முதல் உச்ச நீதிமன்றின் முன்னாலுள்ள வீதியின் மருங்கில், பல்கலைக்கழக மாணவர்கள் பலர், அமைதியான எதிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து, கறுப்புக் கொடி ஏந்தியவர்களாக, முகத்தை கறுப்புத் துணியால் கட்டியவாறு பதாதைகளுடன் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s