கிழ்றிய்யாத் தைக்கா
முகவரி: ஊர் வீதி, காத்தான்குடி-02
ஆரம்பம்:
நிர்வாக உறுபினர்கள்:
காத்தான்குடி ஹிழுறிய்யா பள்ளிவாயலின் புதிய நிர்வாக சபைத் தெரிவு சிறப்பாக நிறைவு!
காத்தான்குடி – 02, ஹிழுறிய்யா பள்ளிவாயலின் புதிய நிர்வாக சபைத் தெரிவு இன்று (27.11.2026) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி SAM. அஷ்ரப் அவர்களின் மேற்பார்வையிலும் வழிநடத்தலிலும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உப குழுக்களில் ஒன்றான பள்ளிவாயல் நிர்வாகத் தெரிவுக் குழுவின் பிரதிநிதிகள் முன்னிலையிலும் இத்தெரிவு இடம்பெற்றது.
பள்ளிவாயலின் எதிர்வரும் மூன்று வருட கால நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஜமாஅத்தார்களின் பங்குபற்றுதலுடன் புதிய நம்பிக்கையாளர்கள் சபை தெரிவு செய்யப்பட்டது.
இதன்போது, புதிய நிர்வாகத்தினர் பள்ளிவாயலின் ஆன்மீக, சமய, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஜமாஅத்தார்களின் ஒற்றுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றைப் பேணி சிறந்த முன்மாதிரியான நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம்:
1. அல்ஹாஜ் MCS. அப்துல் சத்தார் (அமீன் ஹாஜியார்) – தலைவர்
2. அல்ஹாஜ் MI. அமீர்அலி – உப தலைவர்
3. அல்ஹாஜ் MI. மகுமூதுலெப்பை – உப தலைவர்
4. ஜனாப் MRM. அஜ்வத் – செயலாளர்
5. அல்ஹாஜ் ALM. உவைஸ் – பொருளாளர்
6. அல்ஹாஜ் APM. நவ்பர் – உப செயலாளர்
7. அல்ஹாஜ் ALM. ரிசாத் (Eng.) – உறுப்பினர்
8. ஜனாப் NMMA. ரஹீம் – உறுப்பினர்
9. அல்ஹாஜ் MM. அகமது லெப்பை JP (சாந்தி முகைதீன்) – உறுப்பினர்
10. அல்ஹாஜ் MAM. பாயிஸ் – உறுப்பினர்
11. அல்ஹாஜ் MTM. அஸ்மி – உறுப்பினர்
12. ஜனாப் HM. அப்துல் வாஹித் (வஹாப்) – உறுப்பினர்
13. ஜனாப் ALM. பைசான் (பயாஸ்) – உறுப்பினர்
14. அல்ஹாஜ் MSA. சிப்லி – உறுப்பினர்
15. அல்ஹாஜ் MT. ஆதம்லெப்பை – உறுப்பினர்
புதிய நிர்வாக சபையின் பணிகள் சிறப்பாக அமையவும், ஹிழுறிய்யா பள்ளிவாயலும் அதன் மஹல்லாவும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடையவும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
இமாம்கள்:
முஅத்தின்கள்:
ஜமாஅத்தார் சபை:
ஏனைய உத்தியோகத்தர்கள்:
கொள்திறன்:
நிர்வகிக்கப்படும் ஜூம்ஆபள்ளிவாயல்:
நிர்வகிக்கப்படும் குர்ஆன் மத்ரஸாக்கள்:
நிர்வகிக்கப்படும் வியாபார நிலையங்கள்:
ஏனைய சேவைகள்:
ஜமாஅத்தார்கள் எண்ணிக்கை:
குடும்பங்களின் எண்ணிக்கை:


Leave a Reply