குலபாஉர் ராஷிதீன் பள்ளிவாயல்
முகவரி: ஊர் வீதி, காத்தான்குடி-03
ஆரம்பம்:
TP: 0094 65 2246901
காத்தான்குடி 03 மஸ்ஜிதுல் குலபாஉர் றாஷிதீன் பள்ளிவாயலின் புதிய நிர்வாக சபை தெரிவு!
காத்தான்குடி 03ம் குறிச்சி ஊர் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் ராஷிதீன் பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர்கள் சபை தெரிவு இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள காத்தான்குடி பிராந்திய பொறுப்பாளர் அஷ்ஷெய்க் M.I.M மஸீன் இஸ்லாஹி அவர்களுடைய மேற்பார்வையிலும், வழிநடத்தலிலும் இடம்பெற்றது.
பள்ளிவாசலின் எதிர்வரும் மூன்று வருட கால நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஜமாஅத்தார்களின் பங்குபற்றுதலுடன் புதிய நம்பிக்கையாளர்கள் சபை தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகத்தினர் பள்ளிவாசலின் ஆன்மீக, சமய, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஜமாஅத்தார்களின் ஒற்றுமை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் என்பவற்றைப் பேணி, சிறந்த முன்மாதிரியான நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென பிராந்திய பொறுப்பாளரினால் அறிவுரை வழங்கப்பட்டது.
புதிய நிர்வாக சபையின் பணிகள் சிறப்பாக அமையவும், பள்ளிவாசலும் அதன் மஹல்லாவும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடையவும் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக!
தெரிவு செய்யப்பட்ட புதிய நம்பிக்கையாளர்கள் விபரம்.
1.அல்ஹாஜ்
ALM. ஜாபீர்(தலைவர்)
2.அல்ஹாஜ் AGM. ஷஹீத்(உப தலைவர்)
3.அல்ஹாஜ் MSM. இர்பான் ஹாபிஸ் (உப தலைவர்)
4.ஜனாப் RM. ஜெஸ்வர் (செயலாளர்)
5.ஜனாப் MAM. இர்பான் அலி (உப செயலாளர்)
6.அல்ஹாஜ் MAC. நூர்தீன் (பொருளாளர்)
7.அல்ஹாஜ் MIM. முஸ்தபா
8.அல்ஹாஜ் AL. ஹபீப் முஹம்மட்
9.அல்ஹாஜ் AM. மசூத்
10.அல்ஹாஜ் MHM அலியார் (Sir)
11.அல்ஹாஜ் ARM. றிஸ்வி (Doctor)
12.அல்ஹாஜ் ALM ஸபாஹிர்
13.ஜனாப் KLM. முர்ஸித் (Sir)
14.ஜனாப் AA. லத்தீப்
15.அல்ஹாஜ் MIM. ஸஹாப்தீன்
16.ஜனாப் NMAC. நுஜ்ஜி
17.அல்ஹாஜ் மாம். கனிபா (Sir)
#குலபாஉர்ராஷிதீன்_பள்ளிவாசல்
#காத்தான்குடி03
#புதிய_நம்பிக்கையாளர்கள்_சபை
#பள்ளிவாசல்_நிர்வாகம்
நிர்வாக உறுபினர்கள
தலைவர்:
செயலாளர்:
இமாம்கள்:
முஅத்தின்கள்:
ஜமாஅத்தார் சபை:
ஏனைய உத்தியோகத்தர்கள்:
கொள்திறன்:
நிர்வகிக்கப்படும் ஜூம்ஆபள்ளிவாயல்:
நிர்வகிக்கப்படும் குர்ஆன் மத்ரஸாக்கள்:
நிர்வகிக்கப்படும் வியாபார நிலையங்கள்:
ஏனைய சேவைகள்:
ஜமாஅத்தார்கள் எண்ணிக்கை:
குடும்பங்களின் எண்ணிக்கை:


Leave a Reply