மட்டக்களப்பு: பெருந் தலைவர் அஸ்ரப் அவர்கள் கிராம மக்களை அத்திவாரமாக கொண்டு கட்டி எழுப்பிய எமது கட்சியை தற்போதைய தலைவரும் அவருடன் உள்ளவர்களும் கறையானைப் போல் கட்சியை அழித்து விட்டனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மோசமான நிலமையில் கட்சி தோற்றுப் போவதை நாம் விரும்பவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்கு வங்கி மிகவும் மோசமான நிலமையில் உள்ளது. காத்தான்குடியில் 1500 வாக்குகள் எடுப்பதும் கடினம். காரணம் கட்சியில் இருந்து தேர்தலில் வென்று உறுப்பினர்களாகி வேறு கட்சிகளுக்கு தாவிச்சென்றவர்களை மீண்டும் கட்சி சேர்த்ததினால் கட்சிக்காக உழைத்து கட்சியை சொந்த வீடாக கொண்டிருந்தவர்கள் ஓரம் தள்ளப்பட்டுவருவதும் ஒரு காரணம். தலைவர் உடனடியாக புதிய நிர்வாகம் ஒன்றை அமைப்பது எதிர்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு தேவை. அந்த வகையில் கட்சி தாவாதவர்களை கிராமங்கள் ஊடாக இனங்கண்டு இளைஞர்களையும் சேர்த்து கட்சியை மீள கட்டியெழுப்புவது சரியான பாதையாகும்.
நான் தலைவரையும் கட்சியின் உயர் பீட அங்கத்தவர்களையும் குறைகூறவில்லை. எதிர்காலத்தில் கட்சி வாக்கு வங்கி குறைந்து கட்சி செயலிலந்து விடும் என்ற ஐயம் தான். அதாவது பழைய Agent களை ஓரம் தள்ளி புதிய தலைமுறைகளுக்கு வழி கொடுங்கள். தொடராக சுகபோகம் அனுபவித்து வந்தவர்கள் நந்தியைப் போல் நடுவில் அமர்ந்து கொண்டு பதவியையும் வாகனத்தையும் பெற்றுக் கொண்டு கட்சி தாவி கட்சியையும் கட்சித் தலைமையையும் விமர்சித்து வந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைப்பது கட்சியை இன்னுமொரு தடவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் வழியாக இருக்கின்றது.
மக்களின் அபிலாசையை முற்றிலும் நேர்மையாக உழைத்தால் மக்கள் எமது பக்கம் வருவார்கள். இது தான் தற்போது நாம் கண்ட எதார்த்தம். மஹிந்தவின் தோல்வியை அறிந்த நீங்கள் மக்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம். என காத்தான்குடி இடைக்கால மத்திய குழு உறுப்பினறும் காங்கேயனோடை அமைப்பாளருமான MIM. Zarook JP தெரிவித்தார்.
Published by

Leave a comment