අභිවර්ධනය கலை கலாசாரம் CULTURE

Hizbullah Cultural Hall, Kattankudy
http://www.yourkattankudy.com
சம்மேளனத்தின் பாராட்டு விழா 2012 இல் சிறப்பு விருது பெற்றோர்
1. அல்ஹாஜ். ரஊப் A மஜீத் JP (நகர சபை உறுப்பினர்)
இவர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் உருவாக பாடுபட்டமைக்காக விருது வழங்கி கௌளரவிக்கப்பட்டார்
2. அல்ஹாஜ். MTM காலித் JP (முன்னாள் காதி நீதிபதி)
இவர் தனது நீண்டகால தொடச்சியான சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
3. மௌலவி அல்ஹாஜ் ILM முஸ்தபா (பஹ்ஜி) – ஆயுட்கால தலைவர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா-
இவர் தனது நீண்டகால சமய மற்றும் சமூக பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
4. அல்ஹாஜ்.ALM சரீப் (ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர்)
இவர், தான் மேற்கொண்ட கல்வி மற்றும் சமூகபணிக்காக கொரவிக்கப்பட்டார்
5. அல்ஹாஜ். MM ஆதம் லெப்பை (ஓய்வு பெற்ற அதிபர்)
இவர், தான் மேற்கொண்ட கல்வி மற்றும் சமூகபணிக்காக கொரவிக்கப்பட்டார்
இதில் அல்ஹாஜ் MSS அமீர் அலி LLB முன்னால் அமைச்சர் அவர்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் உருவாக்க பாடுபட்டமைக்காக கௌரவிக்க அழைக்கப்பட்டிருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இவரால் சமூகமளிக்க முடியவில்லை.

Islamic Cultural Exibition: 1-3 Feb 2013
http://www.yourkattankudy.com
இலக்கிய மன்றங்கள்
1. முஸ்லிம் கல்விச் சகாய நிதி
2. இக்பால் சனசமூக நிலையம்
3. ஆர்.ஆர்.சீ
4. நவ இலக்கிய மன்றம்
5. காத்தான்குடி பிரதேச செயலகம்
6. காத்தான்குடி பள்ளிவாயல்கள்,முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்

Islamic Cultural Exibition: 1-3 Feb 2013
http://www.yourkattankudy.com
சாகித்திய மண்டல பரிசு பெற்றவர்கள்
1) கவிஞர் அப்துல் காதர் லெப்பை நூல் : ருபய்யாத் (கவிதை) -1965
2) ஜுனைதா ஷரீப் நூல் : பெட்டிசம் (நாவல்) –
3) ரீ.எல்.ஜவ்பர்கான் நூல்: மௌன தேசம் -2002
கலாபூஷண விருது பெற்றவர்கள்
1. மௌலவி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹீ) 1996
2. எம்.எஸ்.எஸ்.ஹமீத் – மருதமைந்தன் 2000
3.ஜுனைதா ஷரீப் 2001
4.சாந்தி முகைதீன் 2001
5. அல்ஹாஜ். ஏம்.ஏ.செய்யித் முஹம்மத் 2002
6. அல்ஹாஜ்.எம்.சீ.எம்.முஸ்தபா 2003
7. முகம்மது இஸ்மாயீல் முகம்மது சுபைர் (பலாஹி) 2007
காத்தான்குடியின் இலக்கியவாதிகள்
மௌலவி அல்ஹாஜ் எம்.எச்.எம். புகாரி (பலாஹி)
எம்.ஐ.எம். சுபைர் (பலாஹி)
(Photo Reqd.)
ரீ.எல். ஜவ்பர்கான் (ஊடகவியலாளர்)
சாலி அப்துல் மஜீட் (மதியன்பன்)
எம். முகைதீன் சாலி (காத்தான்குடி முகைதீன் சாலி)
(Photo Reqd)
புகழ்பெற்ற சிறுகதைகள்:
சொர்க்கதுக்கு சொந்தக்காரி றிஸானா..!!
காத்தான்குடி – மதியன்பன்
அழக்கூட முடியவில்லை
அடைத்துப் போகிறது நெஞ்சு!
உள்ளத்தில் உறைந்தவளே றிஸானா..!
உன் மரணச் செய்தி
இன்னும்
மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்!
சுவனத்துக் குயிலே!
உன் விடுதலைக்காய்
எத்தனை உள்ளங்கள்
இரவு பகல் அழுதன தெரியுமா..?
எல்லாம் முடிந்து விட்டது.
இறைவன்
அழைத்துக் கொண்டான் உன்னை!
என்று நம்புகிறோம்
ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.
றிஸானா!
செல்லமாய் விளையாடும்
சின்ன வயதில்
சிறை சென்ற வண்ண மொட்டு நீ..
அதைக்கூடத் தாங்காமல்
உன்பெற்றோர்
தீயில் விழுந்த புளுவாய்
தீந்து போனதை நாம் அறிவோம்.
இப்போது
இறந்துபோனதை எப்படி
ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..!
உன்
மரணச் செய்தி கேட்டவுடன்
தாய் மொழிந்த வார்த்தைகள்
‘எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?’
இன்னும்
இதயங்களை அரித்துக் கொண்டிருக்கிறது.
இலவு காத்த கிளி என்பார்களே..!
அப்படித்தான் நாங்களும்..
இத்தனை ஆண்டுகளாய்
நீ வருவாய் என
நம்பியே வெம்பிப் போனோம்.
எத்தனை மனுக்கள்
நீ விடுதலை பெற வேண்டும் என்று!
அத்தனையும்
காற்றோடு கரைந்து விட்டனவா..?
தூது கொண்டு சென்றவர்கள்
வரும்போது
மரணத்தூதையா மடியில் சுமந்து வந்தர்கள்…?
மார்க்கத் தீர்ப்பை மதிக்கிறோம்
ஆனால்
மன்னிக்கவில்லை என்பதைத்தான்
எங்களால்
மன்னிக்கமுடியவில்லை..!
றிஸானா..!
குடும்பச்சுமையை குறைப்பதற்காகத்தான்;
நீ
விமானம் ஏறி வெளிநாடு சென்றாய்..!
இப்போது
உன் இழப்பே பெரும் சுமையாகி விட்டது
உன் குடும்பத்தாருக்கு…
றிஸானா
மற்றவர்களின் வருவாய்க்காய்
உன்னை சருகாக்கி விட்டார்களே..!
முதலில்
முகவர்களைத்தான்
தூக்கிலே தொங்க வைத்திருக்க வேண்டும்.
இப்போது
தவறு தவணை கேட்டு நிற்கிறது.
றிஸானா
இன்னும் இரண்டு நாட்களில்
எல்லோரும் மறந்து விடுவார்கள்
உந்தன் குடும்பத்தைத் தவிர….
அப்போது
ஆறுதல் சொல்ல யாரும் வரமாட்டார்கள்.
மௌன அஞ்சலி, மனமுருகும் அறிக்கைகள்
மௌத்து விசாரணைகள்
அரசியல் வாதிகளின் அனுதாப அலைகள்
தலைவர்களின்
தாமதித்த வருகைகள்
இப்படி இன்னும் இன்னும்…
இவை
ஒரு போதும் உன் இழப்புக்கு ஈடாகாது.
உன்னைப்போல்
இன்னும்
எத்தனைபேர் ஏமாறப் போகிறார்கள்…?
யார் பொறுப்பை ஏற்றுக்கொள்வது..?
பெற்றவர்களா..?
எதையுமே கண்டு கொள்ளாத சமூகமா..?
பணம் பறிக்கும் முகவர்களா..?
புரிந்து கொள்ள முடியவில்லை என்னால்..
இது பாடமாகட்டும்
பெண்களை ஜித்தாவுக்கு அனுப்பிவிட்டு
இங்கே
இத்தா இருக்கும் ஆண்களுக்கும்
இன்னும்
சீதனச் சந்தையில் விலைபோக முடியாமல்
வாழ்வை அமைத்துக் கொள்ள
வெளிநாடு போகும் யுவதிகளை
பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும்..
றிஸானா
நீ சொர்க்கத்துக்கு சொந்தக்காரி
உன் இழப்பால்
உருகும் உள்ளங்களின்
பிராhத்தனைகள் என்றும் உனக்குண்டு!
வல்ல அல்லாஹ்
வழங்குவான் உனக்கு சுவர்க்கத்தை..
ஆமீன்!
தாயும் உறவும்
-மிஸ்ஜா
புழுதி மணல்
மண்வாசனை
களிமண் குடிசை
முற்றத்து நிலாச்சோறு
வீட்டுத் தோட்டத்தின் குளிர்ந்த நிழல்
பசும் புற்களின் வாசம் வீசும்
பலவர்ணங்கொண்ட பண்பாய்கள்
குத்தரிசி
அரைத்தமிளகாய்
விருந்தோம்பல்
விளக்கு வெளிச்சம்…..
நான் மழலை மொழிபேசுகையில் என் உம்மா கூறக் கேட்ட வார்த்தைகள் இவை.
பத்துமாதங்கள் சுமந்தவள்.
எனக்கென்று ஏதுமானால் பதறியடித்து துடிப்பாள்.
துன்பங்களை துச்சமாய் மதித்ததால்
இன்பங்கொண்ட கருவரையில் என்னை அவள் சுமந்தாள்.
பாசமாய் முத்தமிடுவாள்.
பாயசம் ஊட்டுவாள்.
தாலாட்டு பாடுவாள்
கதைகளும் கூறி கட்டியணைப்பாள்.
சுகங்கள்தான் எத்தனை!
அ-எழுதிக் காட்டுவாள்.
ஒன்று – என விரலை நீட்டிக் காட்டுவாள்.
அலிப்- என்று ஓதிக்காட்டுவாள்.
அல்லாஹ்வை வணங்கச் சொல்வாள்.
சினுங்கினால் செல்லமாக அடிப்பாள்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அரத்தம் கூறுவாள்.
உறவுகளிடம் கூட்டிச் சென்று
உறவாட வைத்தாள்.
சொந்தபந்தங்களை மதிக்கச் செய்தாள்.
ஆனால்….
இன்றைய உலகில் நானும் ஒரு தாய்!
மழலை வார்த்தைகள் என் குழுந்தையின் உதடுகளில் உதிக்கின்றன.
தாலாட்டுப்பாட நேரமேது?
உறவுகளை அறிமுகம் செய்ய உறவுகள் இல்லை!
ஊர் வேறு…மார்க்கம் வேறு!
கட்சிவேறு…கொள்கை வேறு!
போட்டியும் பொறாமையும் ….
உயரந்த வீடுகளும் உயர்ந்த மதில்களும்
அயல்வீடுகளைத் துண்டித்துச் செல்கிறது.
இரத்த உறவுகள் முடக்கப்படுகிறது.
என் உம்மா எனக்குக் கற்றுத் தந்தவை
அழகான இன்பமான மொழிகள் அவை.
இன்றும் என் அடிமனதில் குடி இருந்தாலும்
செயல்படுத்த முடியாத ஓர் ஊணமாய் என்தாய்மை
என் குழுந்தையோடு இன்று நகர்கிறது.
அன்புள்ள இலக்கியவாதிகளே!
உங்கள் மன்றங்களையும் உங்கள் எழுத்துக்களையும் படைப்புக்களையும் சாதனைகளையும் எங்களுக்கு அறியத்தாருங்கள். உங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் இத்தளம் உங்கள் களம். (புகைப்படங்களையும் அனுப்பலாம்).
நன்றி
என்றும் அன்புடன்
இயக்குனர்.
16/11/2012 at 19:48
kalai ulakattil kalainarkalukku idam koduttemaikku parattukerean.
16/11/2012 at 23:15
நன்றி உங்கள் ஆதரவுகளுக்கு!