காத்தான்குடி காதி நீதிமன்றம்
Qazi Court Kattankudy
Qazi Court Kattankudyhttp://www.yourkattankudy.com
விக்டரி மைதானம்
டீன் வீதி,
புதிய காத்தான்குடி 06
தொ.பே. இல:
காதி நீதிமன்றம்: 0094 65 2245581
செயலாளர்: 0094 777 374267
காதி நீதிபதி
Qazi Judge
*காத்தான்குடி – 03 ச் சேர்ந்த அஷ்-ஷெய்க், அல்-ஹாபிழ் MA. ஹாலித் ஹஸன் (பலாஹி) jp அவர்கள் முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமனம்.*
புதிய காத்தான்குடி – 01 பதுறியா மஹல்லாவில் 1983ம் ஆண்டு மர்ஹூம் முகம்மது அபூபக்கர் கதீஜா பீவி ஆகியோருக்கு நான்காவது மகனாக பிறந்த அஷ் – ஷெய்க், அல் – ஹாபிழ் MA. ஹாலித் ஹஸன் (பலாஹி) JP அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பதிவாளர் நாயகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் மத்தி 165B, 165, 164, 164C, 162 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமிக்கப்பட்டு அதற்கான நியமனக் கடிதத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் JS. அருள்ராஜ் அவர்களின் முன்னிலையில் கிழக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் க. நடராசா அவர்களினால் 10.09.2026ம் திகதி அன்று உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை புதிய காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்திலும், மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1996ம் ஆண்டு ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கலாபீடத்தில் சேர்ந்து 1998ம் ஆண்டு ஹாபிழ் பட்டத்தையும், அதே கலாபீடத்தில் 2006ம் ஆண்டு ஷரீஆ துறையில் மௌலவி, பலாஹி பட்டத்தையும் பெற்றுக் கொண்ட இவர் கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அல்-ஆலிம் பரீட்சைக்கு 2005ம் ஆண்டு தோற்றி சித்தி பெற்று சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.
சமூக சேவை, மார்க்கப்பணிகள், பிறர் நலன்சார் விடயங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் இவர் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் 2010ம் ஆண்டு முதல் 12 வருடங்கள் பேஷ் இமாமாக கடமை புரிந்ததுடன், அக்கால கட்டத்தில் வபாத்தான சுமார் 832 ஜனாசாக்களையும் தன் கரத்தால் குளிப்பாட்டி, கபனிட்டு நல்லடக்கம் செய்யும் பணியினையும் நடுநிசி வேலையிலும் தைரியமாக, உற்சாகமாக கொரோனா காலத்திலும் பின்வாங்காமல் நேர்த்தியாக செய்து காட்டினார். 2011ம் ஆண்டு முதல் குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சபையின் பிரதான பரிசோதகராக நியமிக்கப்பட்டு 10 வருடங்கள் அல் குர்ஆன் பணிக்காக அல்லும் பகலும் பாடுபட்டு அதன் வளர்ச்சிக்கு வித்திட்டார். 2024ம் ஆண்டு சமாதான நீதவானாக நியமனம் பெற்று பல மக்கள் இன்றும் பிரயோசனம் அடைந்து வருகின்றனர்.
மேலும் காத்தான்குடியின் சமூக அமைப்புக்களான ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளராக, உப செயலாளராகவும், பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உறுப்பினராகவும். கதீப்மார் இமாம்கள் சம்மேளன உப செயலாளராகவும், இணைந்து செயல்பட்டுள்ளார். பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன ஹஜ் குழு பிரதான வழிகாட்டியாக இரண்டு தடவைகள் நியமிக்கப்பட்டு நன்மதிப்பைப் பெற்றதும் இவரது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தற்போது காத்தான்குடி ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், அஷ்-ஷுஹதா பள்ளிவாயல், கதீப்மார் இமாம்கள் சம்மேளனம், பிரஜா சக்தி போன்றவற்றின் நிர்வாக சபை உறுப்பினராகவும், கல்முனை மாநகரில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.
புதிதாக முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள அஷ் – ஷெய்க், அல் – ஹாபிழ் MA. ஹாலித் ஹஸன் (பலாஹி) JP அவர்கள் இப்பதவியின் ஊடாக மக்கள் சேவையை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
*அதிபர், விரிவுரையாளர்கள்ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி காத்தான்குடி. 2026.09.12*
முன்னாள் காதி நீதிபதிகள்
Former Judges of Qazi Court
SMM.முஸ்தபா / Musthaffa Jp
1960 – 1981அல்ஹாஜ் MBM.மீரா சாஹிப்/ Meera Sahib JP
1982 – 2000அல்ஹாஜ் MTM. ஹாலித் / Khalid JP
2000 – 2008அல்ஹாஜ் MMM.மஹ்ரூப் கரீம் / Mahroof Careem JP
2008 – 2011
Leave a comment