கர்பலா – பாலமுனை வீதியைப் புனரமைத்ததில் NFGGயின் எந்த முயற்சியும் கிடையாது!- காத்தான்குடி ஐ.தே.க. மத்திய குழு விபரிப்பு!

  • புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ்

karbala roadகாத்தான்குடி: காத்தான்குடி கர்பலா – பாலமுனை வீதியைப் புனரமைப்புச் செய்ததில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எனப்படும் NFGG எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என நேற்று (13.05.2016) மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி கொத்தணிக் கிளை முக்கியஸ்தர்களுக்கான விஷேட அவசரக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 02ம் திகதி NFGGயின் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பியிருந்த ‘UNP-NFGG’ முயற்சியினால் கர்பலா வீதிப்புனரமைப்பு நிறைவடைகிறது’ எனும் தலைப்பிலான அறிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தாமும் இந்த வீதிப்புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், இந்த வேலைத்திட்டம் முடிவடைந்துள்ள நிலையில் அதனை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானுடன் ஐ.தே.கட்சியின் கொத்தணி அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தாபாவும் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை பல்வேறு ஊடகங்களும், இணையதளங்களும் முக்கியத்துவமளித்து செய்தியாக வெளியிட்டிருந்தன.

இச்செய்திகளை அவதானித்த ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணிப் பிரிவு முக்கியஸ்தர்கள் நேற்று மாலை நடைபெற்ற விஷேட கூட்டத்தில் வைத்து, அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா, மத்திய குழுத் தலைவர் கே.எம்.எம். அலியார், மத்திய குழுவின் செயலாளர் எம்.பி.ஏ. கையூம் ஆகியோரிடம் இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர்.

karbala road

காத்தான்குடியையும் பாலமுனையையும் தொப்புள் கொடி உறவாகத் தொடர்புபடுத்தும் இந்த வீதியானது, முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரோமதாசாவினால் அவர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நிர்மானிக்கப்பட்ட கர்பலா மாதிரிக் கிராம நிர்மானத்தின்போது அமைக்கப்பட்டது. இந்த வீதி, கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக மிகவும் மோசமாகச் சேதமடைந்து போயிருந்த நிலையில், இப்பிரதேசத்திலுள்ள NFGG உள்ளிட்ட எந்தவொரு பிரதான அரசியற்கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளாலும் கண்டு கொள்ளப்படாமலேயே இருந்து வந்தது.

இறுதியில் இவ்வீதியை அபிவிருத்தி செய்து தருமாறு ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணிப் பிரிவின் அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபாவிடம் அப்பிரதேச மக்கள் மகஜர் ஒன்றைக் கையளித்ததை அடுத்து, ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாஸிமின் பரிந்துரைக்கமய 70 இலட்சம் ரூபா நிதி இரண்டு கட்டங்களாக ஒதுக்கப்பட்டது.

karbala road.gif1

இந்தப் புனரமைப்பு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஐ.தே.கட்சியின் கொத்தணி அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா மற்றும் ஐ.தே.கட்சியின் மத்திய குழுவினர் விடுத்த வேண்டுகோளின் பேரில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இந்நாள் அமைச்சருமான தயா கமகே பாலமுனைக் கிராமத்திற்கு முதல் முறையாக அவரது தனி ஹெலிகொப்டரில் வந்திறங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வின்போதே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் உட்பட அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களும் பாலமுனைக்கு வந்து கலந்து சிறப்பித்திருந்தனர். தவிர, இந்த வேலைத்திட்டத்திற்கான நிதியொதுக்கிட்டைப் பெறுவதில் ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணிப் பிரிவு அமைப்பாளருடனோ அல்லது மத்திய குழு நிர்வாகிகளுடனோ NFGGயினர் எத்தகைய பங்களிப்புக்களையும் வழங்கியிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டம் பொதுத் தேர்தல் பிரச்சாரக் காலமாகவும் இருந்ததால் பொது எதிர் வேட்பாளரை இம்மாவட்டத்தில் தோற்கடிக்கும் இலக்கில் NFGGயுடன் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வந்தோமே தவிர, இவ்வீதிப் புனரமைப்புக்கும் NFGGக்கும் எத்தகைய சம்பந்தமும் கிடையாது என இதன்போது மேற்படி அமைப்பாளர், தலைவர் மற்றும் செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக NFGG வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டது போன்று, ஐ.தே.கட்சியின் கொத்தணி அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா மத்திய குழுவின் அங்கீகாரத்துடனும், கட்சி ஆதரவாளர்களுடனும் அவ்வீதியைப் பார்வையிடச் செல்லவில்லையென்றும், NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானின் அவசர அழைப்பின் பேரிலேயே அவர் பாலமுனைக்குச் சென்றிருந்தார் எனவும், அவ்வாறு எமது அமைப்பாளரை தந்திரமாக அங்கு வரவழைத்துக் கொண்டு தவறான ஊடக அறிக்கையை வெளியிட்டமைக்காக NFGGக்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இந்த வீதிப் புனரமைப்பு வேலைகள் நிறைவடைந்துள்ளதாக தனது ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்ததும் உண்மைக்குப் புறம்பானதாகும். உண்மையில் இவ்வீதிப் புனரமைப்புப் பணிகள் கர்பலா பொலிஸ் காவலரண் சந்தியைக்கூட இன்னும் எட்டவில்லை. இதற்காகப் பறிக்கப்பட்ட ஜல்லி மற்றும் கிறேஸர் கற்கள் இன்னமும் மீதமாக வீதியோரங்களிலும், தனியார் வளவிலும் குவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட ஐ.தே.கவின் காத்தான்கடி கொத்தணி அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா, 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட இவ்வீதிப் புனரமைப்பு நடவடிக்கையில் பல குறைபாடுகள் பொதுமக்களால் தமக்குச் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அதனை மீண்டும் நான் சென்று அவதானித்து மட்டக்களப்பு வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளரிடம் தெரிவித்திருப்பதாகவும், மிதமுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட ஏழு இலட்சம் ரூபாவில் இக்குறைகளை நிவர்த்தி செய்வதுடன் கர்பலா நகர் அல்மனார் ஜும்ஆப்பள்ளிவாசல் வரைக்கும் இவ்வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தித் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s