17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு உலக அழகிப்பட்டம்

indiaசன்யா சிடி: இந்தியாவைச் சேர்ந்த 20 வயதாகும் மானுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் வோர்ல்ட்’ எனப்படும் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வெல்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, 2000ஆம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தை வென்றார்.
Read the rest of this entry »

உள்ளூராட்சித் தேர்தல்; வேட்புமனு கோரும் அறிவிப்பு 27 ஆம் திகதி

ballot_box1[1]கொழும்பு: உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.இதனடிப்படையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வேட்பு மனுக்கான அறிவித்தலை வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேட்பு மனு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். Read the rest of this entry »

காலி கின்தோட்டை கலவரம்: நடந்தது என்ன…?

காலி கின்தோட்டையில் ஊரடங்கு

galle gintotaகாலி: கின்தோட்டை பகுதியில் ஏற்பட்ட அமைதி இன்மையை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய அங்கு இருநூறிற்கும் அதிகமான பொலிஸாரும், 100க்கும் அதிகமான விசேட அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை இடம்பெற்றுள்ள ஒட்டுமொத்த சம்பவங்களின் அடிப்படையில் 07 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே ராணுவத்தின் பிடியில்

zimbabweஹராரே: ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. ” சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை” உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய பிறகு ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.
Read the rest of this entry »

கடலில் மூழ்கிய சாய்ந்தமருது மாணவனின் ஜனாஸா 3 நாட்களின் பின்னர் திருக்கோவிலில் கரையொதுங்கியது..!

  • அஸ்லம் எஸ். மௌலானா

INSATH sainthamaruthuசாய்ந்தமருது: கடந்த சனிக்கிழமை (11) சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்த மாணவனின் ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். சாய்ந்தமருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப் முஹம்மட் அப்றின் இன்ஸாத் (வயது-16) எனும் மாணவனின் ஜனாஸாவே இவ்வாறு கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »