රෝහල வைத்தியசாலைகள் HOSPITALS
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை
KATTANKUDY BASE HOSPITAL

http://www.yourkattankudy.com

http://www.yourkattankudy.com
கடற்கரை வீதி, புதிய காத்தான்குடி Beach Rd, Kattankudy
காத்தான்குடிஆதார வைத்தியசாலை Kattankudy Base Hospital: 0094 65 2245561
மாவட்ட வைத்தியசாலை மட்டக்களப்பு District Hospital Batticaloa: 0094 65 2222261 /2
ஆரையம்பதி அரசினர் வைத்தியசாலை Arayampathi Govt. Hospital: 0094 65 2250022

http://www.yourkattankudy.com
சுகாதார அமைச்சு: Ministry of Health: www.health.gov.lk
History of the Hospital
Kattankudy Base Hospital
காத்தான்குடி கடற்கரை அருகில் இருக்கும் ஆதார வைத்தியசாலை தொடர்பில் அதன் வரலாற்றை பதிவு செய்யுமாறு என் நண்பர்கள் பலர் குறிப்பாக இளைய தலை முறையினர் தெரிந்து இருப்பதர்க்காக என்னை கேட்டுக்கொண்டதற்காக இந்த பதிவை செய்கின்றேன்.
காத்தாங்குடி வைத்திய சாலைக்கு நிலம் கிடைத்த வரலாறு….
இது நமது ஜாமியா சித்தீகியா பெண்கள் அரபுக்கல்லூரியோடும் தொடர்பு பெறுகின்றது, 1978 ம் ஆண்டு எனது உறவுக்கார மாணவி ஒருவருக்கு இலங்கையின் முதலாவது பெண்கள் அரபிக்கல்லூரியான கல் எலிய மதரசாவில் படிப்பதற்கு ஒரு அனுமதியை பெற நான் சென்றிருந்த போது அந்த அனுமதியைத்தர மறுத்த நிருவாகத்தினர் என்னை காத்தான்குடியில் புதிதாக ஒரு அரபிக்கல்லூரியை ஆரம்பிக்குமாறு ஆலோசனை கூறி எப்படியும் தரமுடியாது நீங்கள் ஆரம்பிக்கவே வேண்டும் என்று அங்கு அதிபராக இருந்த என் நண்பர் மர்ஹூம் றூஹுல் ஹக் மெளலவி அவர்களும் நிருவாகத்தினரும் மறுத்து விட்டனர்.
அப்போது நான் அவர்களிடம் சில நிபந்தனைகளுக்கு நீங்கள் உடன்பட்டால் நாங்கள் ஊர்த்தலைவர்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்க முடியும் என்று கோரிக்கை விடுத்து அவர்கள் அனுமதியை பெற்று வந்தேன்.
அடுத்த நாள் நான் ஊர் வந்து மர்ஹூம் முன்னாள் பட்டின ஆட்சிமன்றத்தலைவர் அஹ்மது லெப்பை ஹாஜியார் அவர்களின் வீட்டிற்கு சென்று விபரத்தை கூறியதும் அவர் மிகவும் சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டார் பின் அவரது ஏற்பாட்டில் சில கூட்டம்கள் நடந்து ஒரு மாத காலத்திற்குள் இந்த ஜாமியா சித்தீக்கிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி தற்போது மில்லத் மகளிர் பாடசாலை இருக்கும் இடத்தில் இருந்த பழய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் தேவை பெரிதும் உணரப்பட்டதால் தனியான கட்டிடம் தேவை அதற்கான காணி ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அன்மையில் மரணித்த எம் எல் எம் காஸிம் (அஸ்லம் நெசவு ஆலை) உரிமையாளர் அவர்களிடம் இந்த தற்போது வைத்திய சாலை அமைந்திருக்குக்கும் இடத்தை இனாமாக பெற்றுக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் படி அஸ்லம் காஸிம் ஹாஜியார் அவர்கள் மறுப்பு கூறாமல் இனாமாக தந்தார் காலமெல்லாம் இது பெண்கள் அரபு கல்லூரியாகவே இருக்க வேண்டும் வேறு கொமர்சியல் தேவைக்கு பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனையும் விதித்தார்.
பின்னர் மர்ஹூம் அஹ்மது லெப்பை ஹாஜியார் அவர்களின் வழி காட்டலில் ஊர்மக்கள் மற்றும் வசூல் மூலம் 80’×20′ அடி அகல நீளம் கொண்ட ஒரு கட்டிடம் அமைத்து அங்கு பெண்கள் அரபுக்கல்லூரி இயங்கத்துவங்கியது, ஆனால் துரதிஸ்ட வசமாக அதை தொடர்ந்து அந்த கட்டிடத்தில் நடாத்த முடியாமல் போனது, அதற்கு பிரதான காரணம் தூரம் மற்றும் வாகன வசதி இல்லாமை குறிப்பாக பாடசாலை முடிந்த பின் வீடு சென்று மீண்டும் மூன்று மணிக்கு மதரசா செல்வது முடியாமல் போகவே மீண்டும் மில்லத் பாடசாலைக்கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
இதனிடையில் அந்த கட்டிடம் பிரயோசனம் அற்று கிடப்பதால் அதை இனாமாகத்தந்த காஸிம் ஹாஜியார் என்னிடம் இந்த நிலத்தை அவருக்கு திருப்பித்தருமாறும் பதிலாக நாங்கள் அடையாளம் காணும் ஒரு இடத்தை வாங்கி இதே போல் ஒரு கட்டிடத்தை அவர் தன் சொந்த செலவில் கட்டித்தருவதாகவும் வாக்குத்தந்தார்.
நான் இந்த விடயத்தை மர்ஹூம் அஹ்மது லெப்பை ஹாஜியாரிடம் கூறிய போது அவர் என்னிடம் எப்படியும் இந்த இடத்தை திருப்பிக்கொடுக்க முடியாது பிற்க்காலத்தில் வேறு ஒரு முக்கிய தேவைக்கு பயன்படுத்தலாம் என்றும் உங்கள் நண்பரை நீங்கள்தான் சமாளித்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இது இப்படி இருக்க 1979ல் நான் தொழில் நிமித்தம் சவூதி அராபியா சென்று விட்டேன் 1981ல் விடுமுறையில் வந்த போதும் அஸ்லம் ஹாஜியார் மீண்டும் இந்த கட்டிடத்தை திருப்பித்தருமாறு கேட்டுக்கொண்டே இருந்தார் நான் மீண்டும் சவூதி போய் விட்டு 1984 ல் வரும்போது இலைங்கையில் வன்முறை வெடித்து இன ஐக்கியம் குறைய தொடங்கியது.
பின்னர் நடந்த சம்பவம்கள் அறிந்ததே இருந்தும் நமது ஊர் மர்ஹூம் முதலியார் சின்னலெப்பை ஹாஜியார் அவர்களால் இனாமாக கொடுக்கப்பட்டு காத்தான்குடி வைத்திய சாலை என்று பதியப்பட்ட ஆரையம்பதியில் இருக்கும் வைத்திய சாலையையோ அல்லது மட்டக்களப்பு பெரிய ஆஸ்பத்திரியையோ உயிர் அச்சுறுத்தல் மற்றும் பயத்தின் காரணமாக காத்தான்குடி மக்கள் பயன் பெற முடியாமல் போனபோது ஊரில் ஒரு வைத்திய சாலை அமைய வேண்டும் என்ற தேவை உணரப்பட்டது.
அந்த நேரம் மர்ஹூம் ஏ சீ எஸ் ஹமீத் அமைச்சர் அவர்களின் உதவியால் மத்திய மருந்தகம் Central Dispensory ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வேளை ஜாமியா சித்தீகிய்யாவுக்கு தற்போது இருக்கும் இடத்தை எம் எச் எம் இக்பால் மெளலவியின் மாமாமார் சேர்ந்து மிக குறந்த தொகைக்கு அந்த காணியை தந்தார்கள் ஊர்மக்கள் உதவியுடன் கட்டிடமும் கட்டி முடித்து அங்கு பெண்கள் மதராசா ஆரம்பமாகி இன்று வியாபித்து மிக திறமையாக இயங்கி வருகின்றது.
பின்னர் அஸ்லம் காஸிம் ஹாஜியார் அவர்களின் சம்மதத்தை பெற்று அவரும் சாட்சிக்கு கையொப்பமிட்டு அந்த காணியை அரபுக்கல்லூரி நிருவாகத்தால் அரச வைத்திய சாலைக்காக இனாமாக கொடுக்கப்பட்டது.
80’×20′ கட்டிடத்தில் இயங்கி வந்த அந்த மருந்தகம் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டது மீண்டும் ஏ சீ எஸ் ஹமீத் மர்ஹூம் அமைச்சரின் உதவியால் மகப்பேற்று மருத்துவ நிலையம் ஒன்று கிடைக்கப்பெற்று அன்று இருந்த எம் பி யின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் அந்த மகப்பேற்று மருத்துவ மனை ஒரு மாலை நேரம் அன்று சுகாதார பணிமனையின் பொறுப்பாளராக (RDHS) அவர்களால் திறந்து வைக்கப்படு ஒரு மணி நேரத்திற்குள் முதல் ஆண் குழந்தையும் பிறந்தது.
அந்த நேரம் கை கொடுத்த பலர் மறக்க முடியாதவர்கள் அவர்களில் முதலாம் நபர் டாக்டர் பரீட் அஹ்மத் அவர்கள் அம்பாறை வைத்திய சாலையில் பொறுப்புதாரியாக பதவியில் இருந்தும் என்னுடைய வேண்டு கோளுக்கு இணங்கி இங்கு வந்தார் அத்தோடு துணையாக இருந்த மருத்துத்தாதி அன்புச்சகோதரி நயீமா அவர்கள் காத்தான்குடி மக்களால் மறக்க முடியாதாவர் மாதக்கணக்கில் தன்வீட்டிற்கே செல்லாமல் நூற்றுக்கணக்கான பிள்ளைகளை தாய்மார் பெற்றெடுக்க உதவிசெய்தவர்.
நமது ஊர் மக்கள் இபடியானவர்களுக்கு கை மாறு ஏதும் செய்யத்தேவை இல்லை மாறாக இந்த சகோதர்களுக்காக பிரார்த்தனை மட்டும் செய்தால் நீங்கள் இறைவனிடம் நன்றி செலுத்தியோராக மாறுவீர்கள்.
எம் எம் செய்யித் அஹ்மத் மெளலவி ( பலாஹி )
காத்தான்குடி
அரச கால்நடை வைத்தியர் காரியாலயம்
Government Veterinary Surgeon

http://www.yourkattankudy.com

http://www.yourkattankudy.com
அரசினர் ஆயுர்வேத மத்திய மருந்தகம்
Govt. Ayurvedic Central Dispensary

http://www.yourkattankudy.com

http://www.yourkattankudy.com
தனியார் சிகிச்சை நிலையங்கள்: PRIVATE DISPENSARIES
Dr. ULM. NAZEERDEEN . MOH. (நஸ்ருதீன்)
Address: Beach Rd, Kattankudy 03
Tel: 0094 65 2245678
Time:
Facilities: ‘Kathna’
Dr. M. ALEEM. MBBS. (அலீம்)
Address: Main Street, Kattankudy 06
Tel: 0094 65 2245790
Time:
Facilities: Pharmacy, ‘Kathna’
Dr. MI. AHAMED FAREED. MBBS. (அகமட் பரீட் )
Address: Jamiullafireen Masjid Rd, Kattankudy 05.
Tel:
Time:
Facilities: Pharmacy.
Dr. Mrs. ALEEMA RAHUMAN. MBBS. (அலீமா)
Address: Main Street, Kattankudy 03
Tel: 0094 65 2246987
Time:
Facilities: X Ray Lab.
Dr. Mrs. RIFKA MAHBOOB. MBBS. (றிப்கா)
Address: Beach Road, New Kattankudy 03
Tel: 0094 65 2245734
Time:
Facilities:
Dr. Mrs. BADUR NIZA NOORDEEN (பதுருன் நிஸா)
Address: Jamiul Lafireen Rd, Kattankudy 05
Tel: 0094 65 2246565
Time:
Facilities:
Dr. SM. JABIR MBBS. (ஜாபிர்)
Address:
Tel: 0094 65 2245070
Time:
Facilities:
Dr. M. FAREED MBBS.
Address:
Tel: 0094 65 2245376
Time:
Facilities:
Dr. M. NAFEEL MBBS. (நபீல்)
Address:
Tel: 0094 65 2246541
Time:
Facilities:
Dr.A .L A. SHIYAM (MBBS)
Dr. SHM. SIRAJ MBBS.
Dr. RTM. ATHIL MB.
Dr. M. SHIBLY MBBS.
DR. M. SHIBLY MBBS
Batticaloa Private Hospitals
NEW PIONEER HOSPITAL நியு பைனியர் வைத்தியசாலை 0094 65 2223642
GV HOSPITAL ஜி.வி. வைத்தியசாலை 0094 65 2223076
Savior சேவியர் மருத்துவமனை 0094 65 2224410/2222470
Athira ஆதிரா மருத்துவமனை 0094 65 2225471
DENTIST பல் வைத்திய நிலையம்
Dr. M. ATHAM LEBBE (ஆதம் லெவ்வை)
Address: Main Street, Kattankudy 03
Tel: 0094 65 2245214
Time:
Facilities:
Dr. M. SANEEJ (சனீஜ்)
Address: Sir. Razick Fareed Mw. Kattankudy 03
Tel:
Time:
Facilities:
Dr. Mrs. ZAROOFA (சரூபா)
Address: Irumbuththaikka Lane, Kattankudy 06
Tel:
Time:
Facilities:
இங்கு குறிப்பிடத் தவறிய வைத்தியர்கள் மற்றும் அவர்களது சிகிச்சை நிலையங்களை தயவு செய்து அறியத்தரவும்.
நன்றி
இயக்குனர்