கொழும்பு: இன்றையதினம் (15) கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில், ஆண்கள் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம், றோயல் கல்லூரியில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 187 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இது 180 புள்ளிகளாக காணப்பட்டது.
Continue reading 2020 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்All posts by yourkattankudy.com
நிவாரணக் கொள்ளையைத் தடுக்க பணம் வழங்குவது சிறந்தது
காத்தான்குடி: இயற்கை அனர்த்தம் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு, சமைத்த உணவு விநியோகத்தில் ஏற்படும் மோசடியைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் வழங்கினால் இந்த மோசடியை நிறுத்த முடியும் என்ற ஆலோசனையை நாம் இங்கு முன்வைக்கின்றோம்.
Yourkattankudy

குர்ஆன் தொடர்பான அமைச்சர் கம்மன்பிலவின் உரை தவறானது: ஜம்இய்யதுல் உலமா
கொழும்பு: கொவிட் 19தொற்று காரணமாக உயிரிழப்போரை அடக்கம் செய்வது தொடர்பாக பாராளுமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பெரிதும் ஏமாற்றமளிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எழுதிய கடிதத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.
Continue reading குர்ஆன் தொடர்பான அமைச்சர் கம்மன்பிலவின் உரை தவறானது: ஜம்இய்யதுல் உலமா“லொக்டவ்ன் நேரத்தில் காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம்”
காத்தான்குடி: காத்தான்குடி பிரதி தவிசாளர், தனது மைத்துனரின் திருமணத்தை லொக்டவ்ன் சட்டத்தை மீறி நடாத்தியிருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Continue reading “லொக்டவ்ன் நேரத்தில் காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம்”அசாத் சாலிக்கு எதிராக சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணைக் குழு விஷேட விசாரணை
கொழும்பு: தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சி.ஐ.டி.யின் சிறப்பு
விசாரணைக் குழு விஷேட விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது. சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப்
பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்
உத்தரவில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸாவின்
ஆலோசனைக்கமைய, சி.ஐ.டி.யின் விஷேட
விசாரணைப் பிரிவு – 3 இன் பொறுப்பதிகாரி
பிரதான பொலிஸ் பரிசோதகர்
குமாரசிங்கவின் கீழ் செயற்படும் சிறப்புக்
குழுவொன்றே இவ்விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறை
கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், உச்ச நீதிமன்றினால் இவ்வாறு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக இருந்த வேளையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் எனும் தெரிவித்ததாக அவருக்கு எதிராக நீதிமன்ற கடந்த 2017அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவரது கருத்தின் மூலம் நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை சீர்குலைந்து விட்டதாக தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவர் ஆகியோரால் உச்ச நீதிமன்றத்தில் குறித்த வழக்குத்த தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய சட்ட மாஅதிபரால், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நீர்கொழும்பு பல்லன்சேனவிலுள்ள இள வயது குற்றவாளிகளைத் தடுத்து வைக்கும் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கல்முனை மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க துரித கதியில் நடவடிக்கை
அபு ஹின்ஸா
கல்முனையில் முடக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் எல்லாம் இயங்காது நிர்கதி நிலையில் வசிக்கும் கல்முனை மக்களின் வாழ்வாதார நிலையைகளையும், தமிழ் சகோதர்களின் எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகையையும் கவனத்தில் கொண்டு துரிதகெதியில் இரண்டாம் கட்ட உலருணவு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் அவர்களை கேட்டுக்கொண்டதுக்கு இணங்க அவசரமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தனக்கு உறுதியளித்துள்ளார் என திகாமடுல்ல மாவட்ட கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
Continue reading கல்முனை மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க துரித கதியில் நடவடிக்கை“பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: ஜனாதிபதி கோட்டாபய
அம்பாறை: பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘வேலை’யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
Continue reading “பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: ஜனாதிபதி கோட்டாபய“முனாபிகீன் ஊருக்குள் இருக்கிறார்கள்“
காத்தான்குடி: காத்தான்குடியில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குப் பின்னால் ஊரில உள்ள முனாபிக்களும் இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Continue reading “முனாபிகீன் ஊருக்குள் இருக்கிறார்கள்“லண்டன் வைத்தியசாலைகளில் அதிகமாக அனுமதிக்கப்படும் கோவிட் தொற்றாளர்கள்
லண்டன்: இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலுள்ள வைத்தியசாலைகளில் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் சற்று முன்னர ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நமது அரசியல்வாதிகளின் அர்ப்பணிப்பு


“மாகாணசபை, ஜனாசாவை புதைத்தல்” போன்றவற்றை அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பது ஏன் ?
ஒவ்வொரு அரசாங்கத்திலும் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான சில எடுபிடி அமைச்சர்கள் இருப்பது வழமை. சர்ச்சைக்குரிய விடயங்கள் அல்லது ஆட்சி தலைவரின் எண்ணங்களை இவ்வாறானவர்களே வெளிப்படுத்துவார்கள்.
