“ஹிஹ்புல்லாஹ் தொடர்பான அனைத்து விபரங்களும் எம்மிடம் உள்ளது”

கொழும்பு: அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ள எதிரணியினர் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் குற்றங்களை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன அலரிமளிகையில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். Read the rest of this entry »

“அடிப்படைவாதிகள் அரசியல்வாதிகளின் உதவியுடன் உருவாகினார்கள்”- சுமணரத்ன தேரர்

இலங்கை உளவியல் ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு தேவலாயத்தில் உயிர் நீத்தவர்களின் 31 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21)  மட்டுகாந்தி பூங்காவில் இடம்பெற்றது அதன் போது மங்களராமா விகாரை விகாராதிபதி சுமணரத்ன தேரர் ஈகைச்சுடர் ஏற்றி  உரையாற்றினார். ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களிலும் மட்டக்களப்பிலும்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாக்குதலில் உயிரிழந்து ஒருமாதம் பூர்தியான நிலையில், நாம் அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி நினைவூட்டுகின்றோம். Read the rest of this entry »

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

இலங்கையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்திற்கு அமைய ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Read the rest of this entry »

இந்துத் தமிழ் மக்களே இந் நாட்டின் பூர்வீகக் குடி மக்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

பௌத்த மதம் இலங்கைக்குக் கொண்டு வந்த போது அம் மதத்தை முதன் முதலில் தழுவியவர்கள் தமிழரே. தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள்  என வடமாகாண சபையின் முன்னால் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் Read the rest of this entry »

சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது

கொழும்பு: கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், கொழும்புஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், மொஹமட் சஹ்ரான் ஹஸீம் தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளது என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. Read the rest of this entry »

உலகக்கிண்ண கிரிக்கட் 2019: உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு