சோத்துக்கு சோரம்போன எங்களுக்கு எப்பதான் நல்ல புத்தி வருமோ ?

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதன் பின்பு கடந்த ஏப்ரல் 12,13 ஆகிய தினங்களில் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டும், முஸ்லிம்களுக்கு கடந்த 24 இல் நோன்புப் பெருனாள் என நாட்டின் மூன்று சமூகத்தவர்களுக்கும் பெருநாள் அனுஸ்டிக்கப்பட்டது. அதில் தமிழ், சிங்கள புத்தாண்டின்போது சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பெருநாள் களை கட்டப்படவுமில்லை, பெருமை புகழ் பாடப்படவுமில்லை.

அதாவது தமிழ், சிங்கள மக்கள் வீட்டினுள் இருந்துகொண்டு கொரோனா வைரசின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் சட்ட வரையறையை கடைப்பிடித்தவாறும், சமூக இடைவெளியை பேணியவாறும் மாஸ்க் அணிந்துகொண்டு குடும்பத்துடன் கொண்டாடுகின்ற பதிவுகள் மட்டுமே முகநூளில் வெளிவந்தது. 

ஆனால் எமது நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்தான் சட்டத்தை மதியாமல் கட்டுப்பாடுகளை மீறிய நிலை காணப்பட்டது. 

அதாவது சமூக இடைவெளியும் இல்லை, மாஸ்க்கும் இல்லை. கொரோனா என்ற அடையாளமே இல்லாத சாதாரண காலங்களைப்போன்ற போட்டிரீதியிலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது.  

குறிப்பாக மாஸ்க் இல்லாமல் கூட்டம் கூட்டமாக சென்று சமைத்து ஒன்றுகூடி விதம் விதமாக சமைத்த உணவுகளை படம் பிடித்து காண்பித்ததன் மூலம் சிங்கள இனவாதிகளின் விமர்சனங்களை நியாயப்படுத்துவதுடன், கொரோனா பாதிப்பினால் வறுமைநிலையில் வாடுகின்ற மக்களுக்கு மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது.    

ஏற்கனவே பேரினவாதிகளின் விமர்சனத்தினாலும், இனவாத அடக்குமுறையினாலும் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகமாகிய நாங்கள் இவ்வாறான பதிவுகள் மூலம் அரசாங்கத்தின் சட்டத்தை கடைப்பிடிக்காத குழப்பக்கார சமூகத்தினர்தான் முஸ்லிம்கள் என்ற விமர்சனங்களுக்கு இன்னுமின்னும் வலுச்சேர்ப்பதாக அமைகிறது. 

எப்போது எங்களுக்கு பக்குவமும், நல்ல புத்தியும், சட்டத்தை மதிக்கும் தன்மையும் வரப்போகுதோ தெரியவில்லை.    

முகம்மத் இக்பால் , சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s