“ஒரு பாடசாலையின் அபிவிருத்திற்கு பெற்றோர் சமூகத்தின் பங்களிப்பு கிடைப்பதென்பது மாபெரும் அருட்கொடையாகும்

al ameen (2)– டீன் பைரோஸ்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியால பாடசாலை மாணவர்களின் , பெற்றோர்களின் முழுமையான பங்களிப்புடன் சுமார் ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான மேசைகள்,கதிரைகள் பாடசாலை சமூகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு (13.02.2014 வெள்ளிக்கிழமை) காலை 08.30 மணியழவில் பாடசாலை வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கோட்டை கல்வி அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், எம்.இப்றாஹீம் ISA ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்,ஆசிரியா்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு மேற்படி பாடசாலைககு தேவையான தளர்பாடங்கள் பெற்றோர்களினால் பாடசாலை சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

al ameen

al ameen (2)

Published by

Leave a comment