ஷஃபான் மாதத்தின் சிறப்பு

cresent_moon[1]உஸாமா இப்னு ஸைத் (ரலியள்ளாஹு அன்ஹு) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின்தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்புநோற்பதை நான் காணவில்லையே என்று வினவிய போது,நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மாதம் விஷயத்தில் (அதன் சிறப்பை உணராது) அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின் பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் எனகூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்)

முஹர்ரம், ஸபர், றபீஉல் அவ்வல், றபீஉல் ஆகிர், ஜுமாதுல்ஊலா, ஜுமாதுல் ஆகிறா, றஜபு, ஷஃபான், றமளான், ஷவ்வால், துல்கஃதா, துல்ஹிஜ்ஜா ஆகியன சந்திர ஆண்டின் மாதங்களாகும். இதில் “ஷஃபான்” மாதம் என்பது சந்திர ஆண்டின் எட்டாவது மாதமாகும்.இந்தமாதத்தில் இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்கும் வழக்கம் உடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

இது புனிதமிக்க மாதமாகிய ரஜப் மற்றும் உயர்வுமிக்க மாதமாகிய ரமாழான் ஆகிய மாதங்களுக்கு மத்தியில் வரும் மாதம் என்பதால், அவ்விரு மாதங்களின் சிறப்பை உணர்ந்து செயல்படும் பலர் “ஷஃபான்” மாதத்தின் உயர்வையும், சிறப்பையும் உணர்ந்து செயல்பட தவறி விடுகின்றனர். இதனாலே இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் மேற்கண்டவாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.

அதேவேளை, மக்கள் அலட்சிமாக உள்ள நேரங்களையும், காலங்களையும் தெரிவு செய்து நல்லறங்கள் மேட்கொள்வதின் அவசியத்தை இந்த ஹதீஸ் வலியுருத்துகிறது. இப்படிப்பட்ட கால, நேரங்களில் ஒருவர் நல்லமல்கள் செய்யும்போது மக்கள் கண்டுகொள்வதில்லை என்பதால் இக்லாஸ் எனும் மனத்தூய்மையுடன், இறைவனின் திருப்தியை மட்டும் நாடி நல்லறங்களை நிறைவேற்ற மிகவும் பொருத்தமான சூழலாக அது அமைந்து விடுகிறது.

இதன்காரணமாக இறைவனுக்கு மிகவும் விருப்பமான அமலாக அந்த அமல்கள் மாறிவிடுகின்றன.

எனவேதான் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் இந்த மாதத்தை தெரிவு செய்து அதிகம் நோன்பு நோற்றுள்ள அதேவேளை மக்களையும் நோன்பு நோற்குமாறு வலியுறித்தி உள்ளார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்த கருத்தை தங்களது “லதாஇபுல் மஆரிப்” என்ற நூலில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

மறுபுறத்தில் மனிதர்கள் மறந்துவிட்ட நிலையில் உள்ள இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் சுன்னாக்களை அமுல் படுத்துவதின் அவசியத்தையும் இந்த ஹதீஸ் வலியுறுத்துகிறது. இப்படியான ஒரு சுன்னாவை ஒருவர் இவ்வாறு அமுல்படுத்துவதன் மூலம், அதனை பின்தொடர்ந்து அந்த சுன்னாக்களை நிறைவேற்றும் அனைவரின் நன்மைகளும் முதலில் அமுல்படுதிய அந்த நபருக்கு எந்த குறைவும் இன்றி கிடைக்கும் என்பது மிகவும் தெளிவானது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள்பின்வருமாறுகூறினார்கள்:

எவரொருவர்சிறந்ததோர் வழிமுறையைஅறிமுகம் செய்து வைக்கின்றாரோஅவருக்கு அதற்கானகூலியும், அவரின்வழிக்காட்டலின்பின் அதனைசெயற்படுத்தும் அனைவரின்நன்மைகளும் கிடைக்கும். எனினும்அவர்களின்நன்மைகளில்எந்தகுறைவும்செய்யப்படமாட்டாது.
அதேபோன்றுயார்தீயவழிமுறையைஅறிமுகம்செய்துவைக்கின்றாரோஅவருக்கு அதற்கானதீமையும், அவரின்வழிக்காட்டலின்பின்அதனைசெயற்படுத்தும்அனைவரின்தீமைகளும்அவர்களின்தீமைகளில்எந்தகுறைவும்இன்றிஇவருக்கும்ஏற்படும். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்தில்லாஹ், ஆதாரம்: முஸ்லிம்)

இறைவனின் பால் எமது செயற்பாடுகளின் அறிக்கை கொண்டு செல்லப்படும் போது, எமது நிலைமைகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. இறைவன் நியமித்துள்ள வானவர்கள் மூலம் எமது செயற்பாடுகள் தொடர்பில் நாளாந்த அறிக்கை, வாராந்த அறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கை என பல்வேறு அறிக்கைகள் இறைவனிடம் கொண்டு செல்லப்படுகிறது.இதன்போது நாம் நல்லறங்களில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானது. இதனையே பின்வரும் ஹதீஸ்களும் தெளிவுபடுத்துகின்றன.

“உங்கள் மத்தியில் வானவர்கள் காலையில் ஒரு பிரிவினரும், மாலையில் ஒரு பிரிவினரும் மாறி, மாறி வருகின்றனர். இவர்கள் இரு பிரிவினரும் “ஃபஜ்ர்” மற்றும் “அஸர்” ஆகிய தொழுகைகளில் சந்தித்துக் கொள்கின்றனர். இவர்களில் ஏற்கனவே வந்தவர்கள் அந்த நேரத்தில் பிரிந்து சென்று இறைவனை சந்திக்கும் போது, எந்த நிலையில் எனது அடியார்களை விட்டு வந்தீர்கள் என இறைவன் வினவுவான், அப்போது, அவர்களை தொழுது கொண்டிருக்கும் போதே விட்டு வந்தோம். மேலும் நாம் அவர்களை சந்திக்கும் போதும் அவர்கள் தொழுகையிலேயே இருந்தார்கள் என பதில் அளிப்பார்கள் என இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைராஹ் (ரலியள்ளஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

‘ஒவ்வொருவியாழன்மற்றும்திங்கட்கிழமைகளில்அமல்கள் (இறைவனிடம்) சமர்பிக்கப்படுகின்றன.

எனவே, நான்நோன்புநோற்றுள்ளநிலையில்எனதுஅமல்கள்சமர்பிக்கப்படுவதைவிரும்புகிறேன்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.’அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

“அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகியஅல்லாஹ்வின் பால் வணக்க வழிபாடுகள்உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாகஇருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்”என்ற மேற்படி ஹதீஸில் வந்துள்ள நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் கூற்று இறைவனிடம் சமர்பிக்கப் படும் வருடாந்த அறிக்கையை எடுத்துக் காட்டுகிறது.

இதனைத் தவிர இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் ஒன்றான நோன்பு கடமையை எந்த சலிப்பும் இன்றி உற்சாகத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நோன்பு நோற்று பயிற்ச்சி பெற்ற நிலையில் அதனை அடைய இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் விரும்பியுள்ளார்கள். இதனையே பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபான்ஆகும், அத்துடன் அதைத் தொடர்ந்துள்ள ரமழான் மாதத்தை (நோன்புநோற்று பயிற்ச்சிப் பெற்ற நிலையில்) அடைவதையும் விரும்பினார்கள்.. என்று ஆயிஷா (ரலி)அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னுஅபீ கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி)

இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள்இனி நோன்பைவிடமாட்டார்கள்என்றுநாம்எண்ணுமளவுக்குதொடர்ந்து நோன்புவைப்பவர்களாகஇருந்தார்கள். இனி நோன்புவைக்கமாட்டார்கள் என்றுநாம்சொல்லுமளவுக்குதொடர்ந்து நோன்புவைக்காதவர்களாகவும்இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழுமையாகநோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான்பார்க்கவில்லை.

நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

அதேவேளை ஷஃபான் மாதத்தின் 15 நாள் இரவில் சிலர் விஷேட வணக்க வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இது ஆதாரமற்ற பித் அத்தான செயல். எனவே அது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் ஷஃபான்15ஆம்தினத்தைச்சிறப்பிக்கப்பிடிக்கப்படும்நோன்புபித்அத்தானநோன்பாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஷஃபானில்இறைவன் விரும்ம்பும் சுன்னத்தானநோன்பைநோற்றுஅல்லாஹ்வின்அருளைப்பெறமுயல்வோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கெல்லாம் அவனது அருற்பாக்கியங்கள் உள்ளனவோ அவற்றை அடைந்து வெற்றி பெற்ற கூட்டத்தில் நம்மனைவரையும் ஆக்கியருள்வானாக. ஆமீன்

  • அஷ் ஷெய்க் மக்தூம் இஹ்ஸானி & மதனி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s