– நமது நிருபர்
காத்தான்குடி: தனது “எல்லாம் அவனே” கொள்கையை கடைப்பிடித்துவரும் முரீதீன்களுக்கும், முஹிப்பீன்களுக்கும் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் எனது வஸிய்யத் எனும் தலைப்பில் ஓர் மஞ்சல் துண்டுப்பிரசுரத்தை கடந்த 06-04-2019 இல் வெளியிட்டிருந்தார். இத்துண்டுப்பிரசுரத்தை தனது ஆதரவாளர்களுக்காகவே அவர் வடிவமைத்துள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
“தங்களை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும், நாங்கள் இவற்றுக்கெல்லாம் பதில் வழங்கக் கூடாது” எனும் அவரது வழமையான “நாய் துறத்துவதுதான் நாம போறதான்” எனும் தொணியில் இத்துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருக்கிறார்.
சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் தனது கொள்ளையை சரிகாண இலங்கை உலமாக்களை காணொளி மூலமாக அழைத்திருந்தார்.
1979ஆம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற மார்க்கப்பிரச்சினையிலிருந்து இன்றுவரை காத்தான்குடி 5, பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் தனது கொள்கைப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் மௌலவி அப்துர் ரஊப் அவர்கள், காத்தான்குடிக்கு வெளியிலும் சில பிரச்சாரங்களை செய்திருக்கிறார்.
மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் ஆரம்ப கால தனது கொள்கையை இத்தகைய மஞ்சல் நிற துண்டுப் பிரசுரமாகவே அவர் வெளியிடுவார். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த மஞ்சல் நிற துண்டுப்பிரசுரமும் அவரது ஆரம்பகால எழுத்து மூலமான கொள்கைப் பிரச்சாரத்தை ஞாபகப்படுத்துகிறது.