பெறுகை நடைமுறைகள் சம்பந்தமான பட்டறைச் செயலமர்வு!

1
BY: Raiz

– ரைஸ்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் கடமை புரியும் ஊழியர்களுக்கான பயிற்சிப் பட்டறை மற்றும் பெறுகை நடைமுறைகள் சம்பந்தான நிர்வாக முறைகளுக்கான செயலமர்வு ஹபரண சாயா விலேஜ் ஹொட்டலில் இடம்பெற்றது.

கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி தலைமையில் கிண்ணியா நகரசபை உத்தியோகத்தர்களும் பட்டறை செயலமர்வில் கலந்து கொண்டனர்.

உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமான செயற்பாடுகள் புறநெகும திட்டத்தினுடாக எவ்வாறு குறைநிறைகளை நிவர்த்தி செய்து செயற்படுத்தவேண்டும் எந்த வகையில் உள்ளுராட்சி மன்றங்கள் அவற்றினை கையாளவேண்டும் என்பதாகவும்,

2

நிருவாக ரீதியாக உள்ளுராட்சி மன்றங்களால் முன்னெடுக்கப்படும் சகல விடயங்களையும் எந்தெந்த வகையில் மக்களுக்கு பாதகமில்லாத வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதான செயன்முறை பெறுகை நடைமுறைகள் சம்பந்தமான பட்டறை செயலமர்வு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

3

இதில் கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி, செயலாளர் யாழினி நரேந்திரநாத் மற்றும் திணைக்களத்தில் குறித்த விடயதானத்தோடு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.நிஜாம்தீன் ஏனைய திணைக்களங்களில் பணிபுரியும் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
5

Published by

Leave a comment