உலகின் முதல் ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன் மீஸு ஜீரோ மாடலை மீஸு நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மிரட்டலான ஹோல்லெஸ் மீஸு ஜீரோ ஸ்மார்ட்போன் இல் ஒரு துளைகள் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன் இல் பட்டன்கள் மற்றும் போர்ட்களுக்கென எந்தத் துளை அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதே சிறப்பு.
இந்தப் புதிய ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன் இல் அணைத்து சேவைகளும் டச் சென்சார்கள் மூலம் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அதிநவீன தொழில்நுட்பத்தினால் மீஸு ஜீரோ ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
yourkattankudy/phones
5.99′ இன்ச் முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே, இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. மீஸு ஜீரோ ஸ்மார்ட்போன் இல் பயன்படுத்தப்பட்டுள்ள எம்சவுண்ட் 2.0 (mSound 2.0) “தொழில்நுட்பம் ஸ்பீக்கர் மற்றும் இயர்போன் ஆற்றலை இரட்டிப்பாக்க அனுமதிக்கிறது.
yourkattankudy/phone
மீஸு ஜீரோ ஸ்மார்ட்போன் இல் 18W அதிவேக வயர்லெஸ் சார்ஜ்ஜிங் சேவை வழங்கப்பட்டுளள்து. மீஸு ஜீரோ ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிம் ஸ்லாட் மற்றும் மெமரி ஸ்லாட் இல்லாத காரணத்தினால் eSIM சேவை வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது முன்பதிவை துவங்கி இருக்கும் மீஸு நிறுவனம் முதல் கட்டமாக 100 மீஸு ஜீரோ யூனிட்களை மட்டுமே வெளியிட திட்டமிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக மீஸு ஜீரோ விற்பனை செய்யப்படும். இதன் இந்திய சந்தை மதிப்பு சுமார் ரூ.92,300 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.