இலங்கையின் வழமையான சுதந்திர தின நிகழ்வுகள் போன்று 71வது சுதந்திர தினமும் இன்று அரங்கேறுகிறது. ஜனாதிபதியும், பிரதமரும், உள்ளுர் அரசியல்வாதிகளும் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, வந்திருப்போர் வாயில் சாந்தியும் சமாதானமும் மலரட்டும் என்ற வார்த்தையை அள்ளிவிட்டு விடைபெறும் ஓர் விடுமுறை நாள் இன்றாகும்.
சாந்தியும் சமாதானமும் மலரட்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளின் புகைப்படத்துடன் அரசாங்க ஊடகங்களிலிருந்து காசு வாங்கும் ஊடகங்கள் வரை இன்றைய பத்திரிகைத் தலைப்புக்கள் ஜொலித்துக்கொண்டிருக்கும்.
ஞானசார தேரருக்கு இன்று விடுதலை கிடைக்குமா என நாட்டில் ஓர் சமூகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
71 வருடங்களின் இறுதியில் ஏதோ தானோ என்று மிஞ்சியிருக்கும் இந்த நாட்டின் வளங்களை அழித்தொழிக்கும் அரசியல் கள்வர்களும் அவர்களது பாரியார்களும் வெள்ளை வெளீரென தொலைக்காட்சிக்கு காட்சி தரும் நாள் இன்றாகும்.
மிளகாய்த்தூளாலும், தூசண வார்த்தைகளாலும் சட்ட சபையை சாக்கடையாக்கிய எம் தலைவர்கள் இன்று பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களில் அணிவகுத்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவும் நாள் இன்றாகும்.
yourkattankudy/politics
இலங்கையின் பெருந்தோட்டப் பயிர் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அதிகரிப்பதற்கு அவர்கள் கொழும்பு வந்து தொண்டை கிழிய கத்த வேண்டி இருக்கிறது.
கவலைப்படாதீர்கள்! இன்றைய தினம் எந்தக் கடைகளும், எப்பள்ளிவாயல்களும் தாக்கப்பட மாட்டாது.
பச்சைக் கட்சியின் வலக்கை காங்கிரஸ் சட்டத்தரணியும், நீலக் கட்சியின் அஜண்டா முப்தியும் முஸ்லிம்களின் இக்கட்டான நிலையில் தலைமறைவாகி விடுகின்றனர்.
yourkattankudy/digana
சுதந்திர தினம் 100வது வருவதற்கிடையில் இலங்கை என்ற தேசம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது யோசிக்க வேண்டியதில்லை.
உலக வரலாற்றில் இரு பிரதமர்கள் ஒரே நேரத்தில் வலம் வந்த தேசம் இது.
சீன மொழியும் இரண்டாம் இடத்தில் இடம்பிடித்துக்கொண்ட நாடு நம் நாடு!
yourkattankudy/parliament fight
50வது சுதந்திர தினத்திற்கும் 71வது சுதந்திர தினத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இதே போல்தான் 100வது சுதந்திர தினமும் முகநூலில் புரபைல் மாற்றுவதோடு போய்விடும்.
முட்டாள்கள் ஆழும் தேசத்தில் சுதந்திரம் எதற்கு..? அதற்கொரு விடுமுறை எதற்கு..??AK79