திரைமறைவில் இடம்பெற்ற மைத்திரி-மகிந்த சந்திப்பு அம்பலமாகிறது

mahinda maithiriகொழும்பு: ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என ஊடக அறிக்கை வெளியாகிய போதிலும், இருவருக்கும் இடையில் உண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பு தொடர்பில் நேற்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்திலும் கருத்த வெளியிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அவர் நிராகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர கட்சியின் உள் தகவல்கள் ஊடகங்களிடம் செல்வதனை தடுப்பதற்காகவே இச்சந்திப்பை ரகசியமாக நடத்திக்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியும் வேறு வேறாக தேர்தலில் போட்டியிடும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வெற்றிலை சின்னத்தில் தன் பிரதிநிதிகள் நாடாளுமன்றில் நியமிப்பதற்கும் இணக்கம் வெளிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் விசேட இணக்கப்பாடு என்றால் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தேர்தல் போட்டியிடுவதனை தவிர்த்தல் மற்றும் கோத்தபாய ராஜபகச்வை கொழும்பில் அல்லது கம்பஹா மாவட்டத்தில் தேர்தலுக்காக நியமித்தலாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றில் நியமிப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ச தன்னார்வமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும், ஷசிந்திர ராஜபக்ச மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் இணக்கப்பாடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எவ்வித பதில் வழங்கியுள்ளார் என இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

எனினும் முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் ஜனாதிபதியும் சந்திப்புக்களை மேற்கொண்டதாக பொய்யான தகவல்களை வெளியாகியுள்ளன என அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தான் கடந்த வியாழக்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சந்திப்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கலந்துரையாடியவைகளை ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் எவ்வித சந்திப்புகளும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பிரிவினால் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டிருந்தன. எனினும் எந்த ஒரு இடத்திலும் இவ்வாறான ஒரு சந்திப்புகள் இடம்பெறவில்லை என இரண்டு அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை.

Leave a comment