கிண்ணியா: வெளியிடங்களிலிருந்து விற்பனைக்காக கிண்ணியாவுக்கு கொண்டுவரப்படும் மீன்கள் அனைத்தையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் திடீர் நடவடிக்கை கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நேற்று இடம்பெற்றது. மீன் விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக நகரபிதா விஜயம் செய்து பார்வையிட்டதோடு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
இச்சோதனை நடவடிக்கை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்;து கிண்ணியா நகரசபை நகரபிதா, நகரசபை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் சகிதம் கிண்ணியா பிரதேச மீன்சந்தைகள், மீன் விற்பனையாளர்களிடம் பரிசோதனைகளை மேற்கொண்டு விற்பனைக்கு உதவாத தரமற்ற மீன்கள் விற்பனை செய்வதை தடைசெய்ததோடு வெளிப்பிரசேங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தரமற்ற மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டதோடு விற்பனைக்கும் தடைவிதித்துள்ளனர்.
மக்களின் நலன்கருதி மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கை தொடருமெனவும் இனிவரும் காலங்களில் இவ்வகையான மீன்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளின் வியாபார உத்தரவுப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமெனவும் கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.



Leave a comment