கிண்ணியா: கிண்ணியாவினை அழகுபடுத்தும் நகரபிதாவின் திட்டத்திற்கு அமைவாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்களில் ஒன்று கட்டையாறு பொது பூங்காவாகும். இப்பூங்காவினை பார்வையிடுவதற்காக நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் சகிதம் புறநெகும திட்ட குழுவினர் கட்டையாறு பூங்காவிற்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
கிண்ணியா நகரசபை புறநெகும திட்டத்தினூடாக கட்டையாறு பகுதியில் அமைத்துவரும் பூங்காவுக்கான கட்டுமான வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் அவற்றினை பார்வையிடுவதற்காகவும் மேலதிகமாக செய்யவேண்டிய வேலைகள் சம்பந்தமாகவும் கண்டறியும் பொருட்டு புறநெகும திட்ட குழுவினர் வருகைதந்திருந்தனர்.
கட்டையாறு பூங்காவில் கலாச்சார பாதிப்பு இல்லாத வகையில் சிறுவர்களுக்கான நீச்சல் தடாகம் அமைப்பதற்கான யோசனையினை வருகை தந்திருந்த புறநெகும குழுவினரிடம் நகரபிதாவினால் முன்வைக்கப்பட்டது. குறித்த யோசனை நல்லதென குறிப்பிட்டதோடு நீச்சல் தடாகம் அமைப்பதற்கான சாதக தன்மை இருக்கின்றது என்பதாக குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இவ்விஜயத்தின் போது நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சுதாகரன், உள்ளூராட்சி ஆணையாளர் பொறியியலாளர் கௌரிபாலன், திட்ட பொறியியலாளர் ராஜகோபாலசிங்கம் இவர்களுடன் நகரசபை உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment