கொழும்பு: கொழும்பு நகரில் பொரளையில் இருந்து
புறக்கோட்டை வரையான பஸ் முன்னுரிமை
பாதைச்சட்டம் இன்று முதல் அமுலாகுவதாக
மேல் மாகாண சிரேஷ் பொலிஸ் மா அதிபர்
தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு முன்னர் கடந்த 8 ஆம் திகதி
முதல் மொரட்டுவையில் இருந்து புறக்கோட்டை
வரை ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் மிகவும்
வெற்றியளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பொரளை, புஞ்சி பொரளை, மருதானை,
டெக்னிக்கல் சந்தி மற்றும் புறக்கோட்டை
பகுதிகளில் இன்று முதல் குறித்த பேருந்து
முன்னுரிமை பாதைச்சட்டம்
அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.