ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டிசொய்சா குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கு நடப்பு அரசாங்கம் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்பது ஆரம்பத்தில் இருந்து அரசியல்வாதிகளினால் மாத்திரமே பேசப்பட்டது.
ஆனால் இன்று பாராளுமன்ற தெரிவு குழுவின் ஊடாக அமைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டமையினால் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் அனுகுமுறைகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஒட்டுமொத்த மக்களும் அறிந்துக் கொண்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.