குவைத்: குவைத்தில் இடம்பெற்ற பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தவேளை, எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.
விபத்துப் படங்கள் உள்ளடக்கம். அனைவருக்கும் ஏற்புடையதல்ல
பர்கான் பீல்ட் என்ற இடம் அருகே அல் அர்தால் நெடுஞ்சாலையில் இவ் விபத்து நிகழ்ந்தது.
எதிர்பாராதவிதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.