கொழும்பு: தாய்லாந்து பிரதமர் இன்க்லக் சித்தவாத்ர (Yingluck Shinawatra) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இன்று சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அன்னாரை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரவேற்றார். அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா சுசில் பிரேம ஜயந்த ஆகியோரும் விமான நிலையம் சென்றிருந்தனர்.
தாய்லாந்து பிரதமருக்கு, இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஜனாதிபதி செயலக வளவில் கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம் பெறும். இடம்பெறும். 19 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படும்.
அதையடுத்து தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு குறித்து கலந்துரையாடவிருக்கிறார். இரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்களும் கைச்சத்திடப்படவுள்ளன.
இதன் பின்னர் பாராளுமன்றத்துக்குச் செல்லும் அன்னார் பிற்பகல் 2.45மணிக்கு பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தவுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரீ தலதா மாளிகையின் மல்வத்தை பீட மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசி பெற உள்ளார்.
நாளை ஜுன் முதலாம் திகதி கொட்டாஞ்சேனை விஹாரையில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்துக் கொள்ளும் தாய்லாந்து பிரதமர் நாளைய தினமே தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புவார்.
-GA