இஸ்லாமிய ஆடை அணிந்ததற்காக பல்கலைக்கழக சவுதி மாணவி இங்கிலாந்தில் தாக்கப்பட்டு கொலை!

saudi– MJ

எசக்ஸ்: இங்கிலாந்தில் எசக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சவுதி அரேபியா நாட்டவரான நாஹிட் அல்மானியா எனும் 31 வயதுடைய மாணவி, 52 வயது பிரித்தானிய நபர் ஒருவரால் பலமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தனது தங்குமிடத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு காலையில் செல்லும்போது, தான் அணிந்திருந்த உடலை மறைக்கும் ஹிஜாப் ஆடையால், குறித்த நபர் ஆத்திரமடைந்தார். இதன் காரணமாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக எசக்ஸ் பொலிஸார் விசாரணையின் பின்னர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட மாணவியின் உடலைப் பரிசோதித்த பொலிஸார், 16 தடவைகள் உடம்பில் குத்தி தாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். கொல்லப்பட்ட மாணவியின் தலை மற்றும் ஏனைய உடற்பாகங்களிலும் இத்தாக்குதல் இடம்பெற்றதால் மரணம் சம்பவித்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி, சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரது ஜனாஸா நாளை சனிக்கிழமை அல்-ஜவ்ஃப் இற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

saudi
சி.சி.ரி.வி. புகைப்படம்

Leave a comment