ஹரீஸ் – ஹக்கீம் மோதல் : மன்னிப்பின் பின்னால் உள்ள அரசியல்..?

20க்கு வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு கட்சி தலைவர்கள் என்ன தண்டனையை வழங்க போகிறார்கள் என்ற வினா பரவலாக மக்களின்உள்ளத்தில் இருந்தது. மக்களின் இவ் வினாவுக்கானவிடையை மு.கா தலைவர் பல வழிகளிலும் தவிர்த்துவந்திருந்தாலும், அவர் பதில் வழங்கியேயாக வேண்டியநிர்ப்பந்தம் நடைபெற்று முடிந்த 30வது பேராளர் மாநாட்டில்ஏற்பட்டிருந்தது. இதற்கான பதில் கிடைத்துமிருந்ததெனலாம்.

20க்கு ஆதரவளித்த பைசால் காசிம் மற்றும் தௌபீக்ஆகியோருக்கு பேராளர் மாநாட்டில் பதவிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. ஹரீஸுக்கு மாத்திரம் பதவிகள்வழங்கப்படவில்லை. ஹரீஸ் தவிர்ந்த ஏனைய இருவரும்மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் யாரிடம்மன்னிப்பு கோர வேண்டும் என்ற நியாயமான வினாமக்களிடையே இருந்தாலும், மன்னிப்பு கேட்டதன் மூலம்அவர்கள் செய்த தவறுகளை, தானாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ் இருவரில் ஒருவர் கடந்த ஜனாதிபதி தெரிவின் போதுகூட மு.காவின் முடிவை புறக்கணித்து, ரணிலைஆதரித்திருந்ததான பலத்த சந்தேகமுள்ளது. இவருக்குமன்னிப்பளிப்பது வெட்கிக்க வேண்டிய ஒன்று.

இவ் விடயத்தில் ஹரீஸ் மன்னிப்புகோர தயங்கியுள்ளார். மன்னிப்பு கோருவதானது, தான் செய்த பிழையை ஏற்றதாகபொருள்படும் என்பதை ஹரீஸ் நன்கே அறிவார். தனது கடந்தகால செயற்பாடுகளுக்கு மக்கள் முன்பு பல நியாயங்களை முன் வைத்த ஹரீஸுக்கு இது பலத்த அவமானத்தைஏற்படுத்தும். அச் செயற்பாடானது ஹரீஸ் மீதானநம்பிக்கையீனத்தை அதிகரிக்கும். அவரின் நெருங்கியஆதரவாளர்கள் கூட ஹரீஸை நியாயப்படுத்த முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள். இது ஹரீஸின் அரசியல்எதிர்காலத்தை பூச்சியமாக்கும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மு.கா தலைவர் ஹக்கீம்ஹரீஸுக்கு எதிரான அரசியலை நேரடியாகவே செய்தார். ஹரீஸும் ஹக்கீமின் சவாலையும் சமாளித்தே தேர்தலைஎதிர்கொண்டார். எதிர்வரும் தேர்தலில் மு.காவில் ஹரீஸுக்குவாய்ப்பளிக்கப்பட்டாலும் ஹரீஸுக்கு எதிரான அரசியலைஹக்கீம் முன்னெடுப்பார் என்பதில் ஐயமில்லை. தற்போது ஹரீஸ் மன்னிப்பு கேட்பாராயின் அவ் வேளையில் அதுஅவருக்கு பாரிய சவாலாக அமையும். வேட்பாளராககளமிறக்கிய பின்பு இவ் விடயத்தை வைத்து ஹரீஸை வீழ்த்தமுனைவார் ஹக்கீம். எதிர்வரும் தேர்தலில் மு.கா தனித்துகளமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. ஹரீஸ் என்ற தனி நபரின்தோல்வி கட்சிக்கு சிறிய பாதிப்பையும் ஏற்படுத்தாதுஎன்பதால், இது ஹரீஸுக்கு எதிரான ஹக்கீமின்செயற்பாட்டை மேலும் வீரியமாக்கும்.

தற்போது ஹரீஸை உள்வாங்கி பதவி வழங்கினாலும், ஹரீஸுக்கு தேர்தல் கேட்க ஆசனம் வழங்கப்படுமா என்ற ஒருசிறிய அச்சமும் இல்லாமலில்லை. அந்தளவு இவர்கள் மீதானமக்கள் எதிர்ப்புள்ளது. 20க்கு ஆதரவளித்தவர்களுக்கு தேர்தல்கேட்க வாய்ப்பளித்தால் மு.கா பலத்த எதிர்ப்பை பெறும்.ஹரீஸ் மன்னிப்பும் கேட்டு, தேர்தலில் களமிறங்கவாய்ப்பளிக்கபடாமலும் விட்டால், ஹரீஸின் அரசியல்என்னவாவது ? மன்னிப்பு கேட்ட பிறகு, இக் குறித்தவிடயத்தில் ஹரீஸ், தன்னை நியாயப்படுத்த மக்கள்முன்னிலையிலும் செல்ல முடியாது. இவ் விடயத்தில் முன்னர்போன்று ஹக்கீமின் அனுமதியோடே செய்தேன் என குற்றம்கூறவும் முடியாது. இவற்றை எல்லாம் வைத்து நோக்கும் போதுஹரீஸ் இக் குறித்த விடயத்தில் மன்னிப்பு கேட்காமல்தவிர்ப்பதே சாதூரியம் எனலாம்.

ஹரீஸ் மன்னிப்பு கேட்காமல் அவரை கட்சியோடு இணைக்கமுடியாத நிர்ப்பத்தில் ஹக்கீம் உள்ளார். யார் என்னசொன்னாலும் ஹக்கீமை பொறுத்தமட்டில் தற்போது ஹரீஸைஉள்வாங்குவதையே பொருத்தமாக கருதுகிறார். உள்வாங்கிவெட்டு கொடுப்பதே அவரது நோக்கம் எனலாம். இதனையேகடந்த பேராளர் மாநாட்டிலும் ஹக்கீம் வெளிப்படுத்திஇருந்தார். ஹரீஸ் மன்னிப்பு கோரினால் அவரது பதவிகளைவழங்க, தலைமை முன் நிற்கும் என்பதை பகிரங்கமாகபேராளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியிருந்தார். இதுமன்னிப்பின் நோக்கை பிறழச் செய்கிறது எனலாம்.

 

ஒருவர், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதே மன்னிப்பின் நோக்கம் சரியாகும். ஒருவரிடம், நான்உனக்கு பதவி தருகிறேன், மன்னிப்பு கேளு என அழைப்புவிடுப்பது மிக கேவலமானது. மன்னிப்பு வழங்குபவரேமன்னிக்க தயார் என, மன்னிப்பு கேட்க முன்பே பகிரங்கமாககூறுவது நாகரீகத்தின் மிக இழி நிலை எனலாம். இதனை விடஇயலாமை வேறொன்றுமில்லை. மன்னிக்கவே முடியாத பாரியசமூக துரோகத்தை செய்துள்ள இவருக்கு, மன்னிப்பு கேட்கமுன்பே மன்னிப்பு வழங்கியுள்ள ஹக்கீமின் தாராள குணம்வேறு யாருக்கும் இருக்காது. அஷ்ரபின் முயற்சியில்விருட்சகமான இந்த மரம் ஹரீஸ் எனும் தனி நபரில் எந்தளவுதங்கியுள்ளது என்பதை இவ் விடயம் துல்லியமாக்கின்றது.

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s