கொழும்பு: உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை
தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக
தற்போது சிறையில் இருக்கும் நௌபர்
மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளதாக
அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது
இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் மாநாட்டில்
கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத்
வீரசேகர இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான
சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில்
உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல்
அக்பர் ஆகிய இருவரும்
இனங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்
வீரசேகர ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.