கொழும்பு: முல்லேரியா IDH வைத்தியசாலையில் கொரோனா நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர், அவ்வைத்தியசாலையிலிருந்து இன்று (24) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதோடு, குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவரது இடது காலில் உபாதை காரணமாக நொண்டியவாறு நடப்பவர் என்பதோடு, குறித்த நபரைக் கண்டுபிடிப்பதற்காக, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
திருகோணமலை, வெள்ளிமலர், சின்னம்பிள்ளைசீமை (Sinnampilleisimei, Wellimalar, Trincomalee) பகுதியைச் சேர்ந்த 41 வயதான எல்சியாம் நஸீம் (Elsiyam nazeem) என அழைக்கப்படும் மொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் தொடர்பான தகவல் தெரிந்தால்
119
071 8591017
071 8592290
0718591864
எனும் தொலைபேசி இலக்கங்கள் மூலமாக வழங்குமாறும், பொதுமக்களை பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.