ஓரு இலட்சத்தை அடைந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதத்தில் குறையும்

கொழும்பு: இலங்கையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் (8g) விலை ஒரு போதுமில்லாது ரூபா ஒரு இலட்சத்தை எட்டியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை ரூபா 88,000 முதல் 93, 000 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய மாணிக்கக் கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் மதிப்பீடு மற்றும் ஹோல்மார்க் பிரிவு பிரதிப் பணிப்பாளர் இந்திக பண்டார இதனைத் தெரிவித்தார்.

கொரோனா பரவலுக்கு முன்னர் 22 கரட் தங்கத்தின் விலை ரூபா 82,000 முதல் 87,000 ஆக காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.null

22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ரூபா 6,000 இனால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தங்கத்தின் இருப்புகள் குறைக்கப்பட்டதாலும், தங்க விற்பனைச் சந்தையில் தங்கத்திற்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வங்கிகளால் ஏலம் விடப்படும் தங்கத்தின் அளவு குறைந்துள்ளமையும் இவ்விலை உயர்வுக்கு காரணம் எனவும், கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் பெரும்பாலான நாடுகளில் விமானப் பயண கட்டுப்பாடுகள் காரணமாக, மொத்த தங்க கொள்வனவு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இவை இவ்வதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விமானப் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், தங்கத்தை கொள்வனவு செய்வதில் மீண்டும் ஆரம்பிப்பதன் மூலமும் நாட்டில் தங்க இருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்ப உத்தேசித்துள்ளதாக இந்திக பண்டார சுட்டிக் காட்டினார்.

அதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வழமையான வகையில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s