கொழும்பு; மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க , அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோரை கைது செய்யுமாறு பிடியாணை பெறுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உட்பட 12 பேரை பிடியாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கியின் முறிகள் ஏலம் மோசடி தொடர்பிலேயே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.