• இர்ஷாட் ஏ. காதர்

muslim wesakகொழும்பு: பௌத்தர்களின் பெரும் கொண்டாட்டமாகத் திகழும் வெஷக் தினத்தினை முன்னிட்டு இலங்கையில் வழமை போன்று வர்ண தோரணங்களும், மத வழிபாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. இத்தகைய வெஷக் வழிபாடுகளுக்கும் அதன் தோரணங்களுக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிலர் பங்குபற்றி சர்வமதமும் சம்மதமே என்ற ரீதியில் ஒன்றிணைந்து சிறப்பித்து வருகின்றனர்.

முஸ்லிம்களுக்கு நெருக்கடி ஏற்படுகின்றபோது, குனு{த் ஓதுங்கள், நோன்பு வையுங்கள், பிரார்த்தனையில் ஈடுபடுங்கள், அல்லாஹ்வின்பால் முழு நம்பிக்கையும் வையுங்கள் என கூறுகின்ற இமாம்களும், முப்திகளும், மௌலியர்களும், அச்சத்தின் காரணமாக அல்லாஹ்வின் மேல் இருந்த நம்பிக்கையைத் தள்ளிவைத்துவிட்டு,அந்நியமத அனுஸ்டானங்களில் கலந்து பிச்சையேந்தும் நிலைக்கு தங்களை அர்ப்பணித்திருக்கின்றனர்.

muslim wesak

இந்த வழிகாட்டலும், தங்களுடைய சர்வமத நல்லிணக்க முன்னெடுப்புக்களும் நாளை எமது யுவதிகளை தாராளமாக நீங்கள் காட்டிய இவ்வழியில் நுழையச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

muslim wonen

தற்கொலைத் தாக்குதலில் பரிதவித்து உறவுகளை இழந்துவாழும் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு உங்களின் முன்னெடுப்பு என்ன..?

மினுவாங்கொட, ஹெட்டிப்பொல மக்களுக்கு உங்கள் நியாயம் என்ன..?

நாட்டில் பல பகுதிகளிலும் சுருண்டுபோய் வீட்டிலிருக்கும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு உங்கள் பதில் என்ன..?

உங்களை ஒரு போதும் அவர்கள் அழைக்கவில்லை. நீங்களாகவே சென்று பாய்ந்துகொடுத்து, இருப்பதையும் கொடுத்து, ஈமானையும் இழந்து வந்திருப்பீர்கள்.

rizvi muslim

நீங்கள் காட்டும் மத நல்லிணக்கம் தவறானதாகும்.

அல்லாஹ் எவ்வழியை உங்களுக்குக் காண்பிக்கக் கற்றுத்தந்தானோ அவ்வழியில் நீங்கள் மக்களுக்குக் கற்றுக்கொடுங்கள். அதுதான் ஓர் இமாமுக்கு உரிய செயல்.

rizvi muslim1

அச்சத்தாலும், வறுமையாலும் அல்லாஹ் எம்மைச் சோதிக்கும் போது வெஷக் கூடு ஏற்றுவது தீர்வாகாது.

அல்லாஹ் எம் அனைவரையும் உங்களிடமிருந்து பாதுகாப்பானாக!

யுவர்காத்தான்குடிக்காக
இர்ஷாட் ஏ. காதர்