கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஶ்ரீ சுபோத்ராராம முன்பள்ளி பாடசாலைக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு

kalmunai
BY: FM. Farhan

-பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஶ்ரீ சுபோத்ராராம முன்பள்ளி பாடசாலைக்கு ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரை, மேசை மற்றும் புத்தகப்பை என்பன இன்று (25.03.213) காலை வழங்கிவைக்கப்பட்டது.

சுபோத்ராராம முன்பள்ளி பாடசாலை பொறுப்பாளர்  ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வரின் செயலாளர் ஏ.எல்.எம். இன்சாத், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த பாடசாலைக்கு மின்சார வசதியின்மை மற்றும் பாடசாலை கட்டடத்தின் சுற்றுப் பிரதேசம் தாழ் நிலமாக காணப்படல் போன்ற குறைபாடுகள் தொடர்பில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பினை பெற்றுத்தருவதாகவும், தாழ்நில பிரதேசங்களிற்கு மண் இட்டுத்தருவதோடு சுற்றுச் சூழலை சிரமதானம் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

This slideshow requires JavaScript.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s