கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம், முந்தளம் மத்ரஸா அதிபர் மொஹமட் ஷகீல் ஆகியோருக்கு குற்றபத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தொடர்பான சட்டம் (ICCPR) ஆகியவற்றின் கீழ், புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரினால் 5 குற்றஞ்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இவ்வாறு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், கடந்த 2018 ஓகஸ்ட் 01 – 31 காலப் பகுதியில், குறித்த மத்ரஸாவில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு பல்வேறு தீவிரவாத கருத்துகளை போதித்ததாகவும் இது பயங்கராவத தடைச் சட்டத்தின் கீழ் சதித்திட்டம் என, நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.