Category: Your Kattankudy
-
அபூபக்கர் அல் பக்தாதிக்கு கடிதம் எழுதிய இந்திய உலமா
– AF-90 டெல்லி: லக்னோவில் உள்ள தாருல் உலூம் நத்வதுல் உலமா அமைப்பின் மெளலானா சல்மான் நத்வி, ஈராக்கின் இஸிஸ் போராட்ட அமைப்பின் தலைவருக்கு நம்பிக்கை நாயகனே என்று விளித்துக் கடிதம் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
-
கட்டார் ஏர்வேஸ் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கட்டார் ஏர்வேஸ் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் கடந்த 19-07-5014 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இல.28, பார் வீதி ,மட்டக்களப்பு எனும் முகவரியில் அமையப்பெற்றுள்ள மேற்படி விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயத்தை கட்டார் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் ஜெய் ஜோகப் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
-
‘சரத் பொன்சேகாவின் நிலையே சோபித தேரருக்கும் ஏற்படும்’
– SHM கொழும்பு: கடந்த 2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் நிலையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் மாதுளுவேவ சோபித தேரருக்கு ஏற்படும்’ என்று இளைஞர் வலுவூட்டல்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார்.
-
மலேசிய விமானக் கதையை மறக்கடித்த காஸா: நேற்று மாத்திரம் 100 பேர் ஷஹீத்! இஸ்ரேலிய இராணுவ வீரன் கைது!
– MJ ஜெரூஸலம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரைக்கும் இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல்களில் 100 பொதுமக்கள் ஷஹீதாகியுள்ளனர். ஏற்னவே 87 என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்கள் மரணத்தை அடைந்தனர். இதன் காரணமாக நேற்று மாத்திரம் ஷஹீதான காஸா மக்களின் எண்ணிக்கை நூரைத் தொட்டிருக்கின்றது.
-
இலவசம்
– பிரகாசக்கவி ஓ உலகமகா கசாப்புக்கடைக்காரர்களே… உங்கள் கடைகள் திறந்ததே இருக்கட்டும் கொஞ்சம் என்னோடு வாருங்கள்
-
ஏறாவூரில் ஹெரோயின் பொதிகள்: வியாபாரி தப்பியோட்டம்!
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து 4 பொதி ஹெரோயின் கைப்பற்றப்பட்டன. இதன் எடை 160 மில்லிகிராம் என மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ். தங்கராசா தெரிவித்தார்.
-
இஸ்ரேலின் இன்றைய தாக்குதலில் மாத்திரம் 87 காஸா மக்கள் ஷஹீத்: ஹமாஸின் தாக்குதலில் 13 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி!!
– MJ ஜெரூஸலம்: கடந்த12 நாட்களாகத் தொடரும் காஸா மீதான இஸ்ரேலின் பயங்கரவாத ஏவுகணைத் தாக்குதலில் 87 காஸா மக்கள் ஷஹீதாகி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த 12 நாட்களில் ஆகக் கூடிய மக்கள் ஷஹீதாக்கப்பட்ட தினமாக இன்றைய ஞாயிற்றுக்கிழமை அமைகிறது.
-
இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ (கானொளி)
– MJ ஜெரூஸலம்: காஸா மக்களை கொன்றொழிக்கவும், இஸ்ரேலியர்களைப் பாதுகாக்கவும் பல பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்புத் தளம் ‘அயர்ன் டோம்’ (Iron Dome) என அழைக்கப்படுகிறது.
-
பக்தாத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு இஸிஸ் உரிமை கோரியது!
– MJ பக்தாத்: ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இரு தற்கொலைத் தாக்குதல்களிலும் 27 பேர் கொல்லப்பட்டனர். ஷியா பிரிவினர் அதிகமாக வசிக்கும் பகுதியிலேயே இத்தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
-
இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று 34 பேர் ஷஹீத்: ஹமாஸின் தாக்குதலில் 2 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி!
– MJ ஜெரூஸலம்: நேற்று சனிக்கிழமை காஸா மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மாத்திரம் குறைந்தது 34 காஸா பொதுமக்கள் ஷஹீதாகி இருக்கின்றனர். மாறாக ஹமாஸ் மேற்கொண்ட பதில் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
-
‘அரசியலில் நாட்டமில்லை ஈடுபடப் போவதுமில்லை’
கொழும்பு: அரசியலில் தனக்கு நாட்டமில்லை எனவும், ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
பரிஸ் மற்றும் அங்காரா ஆகிய நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின!
– MJ லண்டன்: நேற்று சனிக்கிழமை லண்டனில் இஸ்ரேலுக்கு எதிராக இடம்பெற்ற பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தில் 15,000 மக்கள் ஆர்வத்துடன் கலந்து, காஸா மக்களுக்காகக் குரல்கொடுத்திருந்தனர். இதே போன்றதொரு பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரில் இடம்பெற்றது.