ஏறாவூரில் ஹெரோயின் பொதிகள்: வியாபாரி தப்பியோட்டம்!

drugsமட்டக்களப்பு: மட்டக்களப்பு மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து 4 பொதி ஹெரோயின் கைப்பற்றப்பட்டன. இதன் எடை 160 மில்லிகிராம் என மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ். தங்கராசா தெரிவித்தார்.

இச்சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிச்நகர் லெப்பை வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த போதைப் பொருள் வியாபாரி வியாபாத்திற்குப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியை கைவிட்டு தப்பியோடியுள்ளார். முச்சக்கர வண்டியினுள்ளிருந்து போலி யான அடையாள அட்டைகள், ஒரு தொகை பணம் உட்பட வேறு பொருட்களும் மதுவரி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

drugs

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவரை கைது செய்வதற்காக அதிகாரிகள் தேடி வருகின்றனர். இன்று திங்கட்கிழமை போதைப்பொருள் முச்சக்கரவண்டி உட்பட கைப்பற்றப்பட்ட பொருட்கள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இச்சுற்றிவளைப்பின் போது திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி எஸ். தங்கராசா தலைமையில் எஸ். அலவத்தேகம, கே. ஆனந்தநாயகம், ரமேஸ்குமார், எம். ஜெயக்குமார், வர்ணசூர்ய, எஸ். ரஜனிகாந்த், வசந்த புஸ்பகுமார ஆகிய மதுவரி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.TK

Published by

Leave a comment