இலவசம்

gazagirls[2]– பிரகாசக்கவி


உலகமகா
கசாப்புக்கடைக்காரர்களே…

உங்கள் கடைகள்
திறந்ததே இருக்கட்டும்

கொஞ்சம் என்னோடு வாருங்கள்

அங்கே தாளிட்டிருக்கும்
கொட்டாய்களையும்
தொழுவங்களையும்
கொஞ்சம் தகர்த்தெறிவோம்

அந்த
ஜீவன்கலேனும் கொஞ்சம்
நிம்மதியாய் சுவாசிக்கட்டும்

வெட்டி
வகுந்து
துண்டு போட
மாமிசமின்றிப் போகும் என்னும்
கவலை உங்களுக்கு
கடுகளவேனும்
வேண்டவே வேண்டாம்

ஏகாதிபத்திய வல்லரசுகளின்
வாசலுக்கு செல்லுங்கள்

அங்கே
பலஸ்தீன் பக்தாத் என்று நீளும்
அடக்குமுறைப் பரம்பலில்

இன்னும்
மூலை முடுக்குகள் எங்கும்

குண்டு போட்டு
கூறு போட்டு
குவித்திருக்கும் என்
உடன்பிறப்புகளின்
மாமிசம் மட்டும் இலவசம்!

TOPSHOTS-PALESTINIAN-ISRAEL-GAZA-CONFLICT

Published by

Leave a comment