அபூபக்கர் அல் பக்தாதிக்கு கடிதம் எழுதிய இந்திய உலமா

baghdadi isis– AF-90

டெல்லி: லக்னோவில் உள்ள தாருல் உலூம் நத்வதுல் உலமா அமைப்பின் மெளலானா சல்மான் நத்வி,  ஈராக்கின் இஸிஸ் போராட்ட அமைப்பின் தலைவருக்கு நம்பிக்கை நாயகனே என்று விளித்துக் கடிதம் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸிஸ் தலைவரான அபு பக்கருக்குத்தான் கடிதம் அனுப்பியுள்ளார் நத்வி.ஆனால் அந்தக் கடிதம் அபு பக்கருக்கு அறிவுரை கூறி எழுதப்பட்ட கடிதம் என்று விளக்கியுள்ளார் நத்வி.

இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்குமாறும், தவிர்க்குமாறும்தான் நான் அபுபக்கருக்கு கோரிக்கை விடுத்து அதில் எழுதியுள்ளேன் என்றார்.

தனது கொள்கைக்கு எதிரானவர்களை ஓர் அமீர் (ஹலீபா) எவ்வாறு கொன்று ஒழிக்க முடியும், இதுதான் நபி வழியா என பல்வேறு உலமாக்கள் பக்தாத்திக்கு எதிராக இந்தியாவில் குரல் கொடுத்துவரும் நிலையில், நத்வி எழுதிய கடிதத்தை பக்தாதி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனவும் இந்திய உலமாக்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

Published by

Leave a comment