பரிஸ் மற்றும் அங்காரா ஆகிய நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின!
– MJ
லண்டன்: நேற்று சனிக்கிழமை லண்டனில் இஸ்ரேலுக்கு எதிராக இடம்பெற்ற பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தில் 15,000 மக்கள் ஆர்வத்துடன் கலந்து, காஸா மக்களுக்காகக் குரல்கொடுத்திருந்தனர். இதே போன்றதொரு பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரில் இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்திலும் பல்லாயிரக்கணக்காக மக்கள் கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராகக் கோஷமிட்டனர். இஸ்ரேலின் இரு கொடிகளைப் பற்றவைத்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் திணரிப்போயினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி கற்களை வீசியும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ மூட்டியும், கலவரத்தில் ஈடுபட்டனர்.
Paris, FranceParis, France
இதே போல் துருக்கியின் தலைநகர் அங்காராவிலும், இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அங்கும் ஆர்ப்பாட்டத்தையடுத்து பின்னர் கலவரம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment