இஸ்ரேலின் இன்றைய தாக்குதலில் மாத்திரம் 87 காஸா மக்கள் ஷஹீத்: ஹமாஸின் தாக்குதலில் 13 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி!!

israel– MJ

ஜெரூஸலம்: கடந்த12 நாட்களாகத் தொடரும் காஸா மீதான இஸ்ரேலின் பயங்கரவாத ஏவுகணைத் தாக்குதலில் 87 காஸா மக்கள் ஷஹீதாகி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த 12 நாட்களில் ஆகக் கூடிய மக்கள் ஷஹீதாக்கப்பட்ட தினமாக இன்றைய ஞாயிற்றுக்கிழமை அமைகிறது.

நேற்றிரவிலிருந்து தற்போது வரை இஸ்ரேல் தனது ஏவுகணைத் தளத்திலிருந்து ஏவுகணைகளையும், ஆட்டிலரி ஷெல்களையும் காஸா மக்கள் மீது அனுப்பிக்கொண்டிருக்கின்றது.

காஸா போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் சிக்குண்டு 13 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனை இஸ்ரேல் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

காஸாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் செஜையா எனும் பிரதேசத்தில் மாத்திரம் 67 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்திருக்கின்றனர். எங்கும் இரத்தம் தோய்ந்த காட்சிகளாய் காணப்படுகிறது காஸா ;

Published by

Leave a comment