ஜெரூஸலம்: காஸா மக்களை கொன்றொழிக்கவும், இஸ்ரேலியர்களைப் பாதுகாக்கவும் பல பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்புத் தளம் ‘அயர்ன் டோம்’ (Iron Dome) என அழைக்கப்படுகிறது.
இரும்புக்கோட்டை என இஸ்ரேலால் வர்ணிக்கப்படும் அயர்ன் டோம் ஏவுகணைத் தளம்தான் இஸ்ரேலுக்கான அதியுயர் காதுகாப்பு முகாமாக கருதப்படுகிறது.
இங்கிருந்துதான் செய்மதிகள் ஊடாக, காஸாவில் சிறுவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். எந்த வீட்டில் அதிகமாக குழந்தைகள் இருக்கின்றனர். எப்பிரதேசத்தில் சிறுவர்களும், பெண்களும் செறிந்து காணப்படுகின்றனர் என்பதை காஸாவிலிருந்து 40 கி.மீ. அப்பால் அமைந்திருக்கும் அயர்ன் டோமிலிருந்து அவதானித்து, இரவோடிரவாக ஏவுகணைகளை அனுப்பி அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கின்றது இஸ்ரேல்.
எதிர்கால சமுதாயத்தின் வாரிசுகளை ஒழித்துக்கட்டும் முகமாகவே குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
இதேபோல், காஸாவிலிருந்து போராளிகளால் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளை வானில் வைத்து வழிமறித்து, செயலிழக்கச்செய்யும் உபாயத்தைக் கொண்ட ஏவுகனைகளையும் அயர்ன் டோமிலிருந்தே இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
எனினும், இந்த அயர்ன் டோமில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளில் இருந்து, காஸா போராளிகளின் ஏவுகணைகள் எப்படி தப்பித்து, இஸ்ரேலுக்குள் விழுந்து வெடித்திருக்கின்றன என்பதுதான் இஸ்ரேலால் தாங்க முடியாமல் இருக்கின்றது.
இங்கு இணைக்கப்பட்டிருக்கும் காணொளி 2012 காலத்தில் பதிவேற்றப்பட்டதாகும்.
Published by
![irondome[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/irondome1.gif?w=150&h=105)
![irondome[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/irondome1.gif?w=430&h=303)
Leave a comment