ஜெரூஸலம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரைக்கும் இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல்களில் 100 பொதுமக்கள் ஷஹீதாகியுள்ளனர். ஏற்னவே 87 என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்கள் மரணத்தை அடைந்தனர். இதன் காரணமாக நேற்று மாத்திரம் ஷஹீதான காஸா மக்களின் எண்ணிக்கை நூரைத் தொட்டிருக்கின்றது.
ஊடக முறியடிப்பும் தோல்வியும்:
மேலத்தேய ஊடகங்களும், முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்களும் காஸா செய்திகளை மறக்கடிக்க முயற்சித்திருந்த வேளையில், மலேசியாவின் எம்.எச். 17 விமானம் யுக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே தன்வாய்க்கு மெல்வதற்கு அவல் கிடைத்த ருஸியில் காசா செய்திகளை இருட்டடிப்புச் செய்து, குறித்த விமானத்திற்கு முக்கியத்துவமளித்து இவர்கள் எழுதித்தள்ளினர். எனினும், விமானம் வீழ்ந்த மறுநாளே உலக மக்களின் கவனம் எல்லாமே காஸா மக்களை நோக்கியே இருந்து வருகின்றன.
இதன் காரணமாக மூக்குடைபட்ட மேலத்தேய, மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள், செய்வதறியாது, தலைப்புச் செய்தியை காஸாவாக ‘ஹைலட்’ செய்துவிட்டு, விமானச் செய்தியை பிற்படுத்தியிருக்கின்றன.
இஸ்ரேலுக்கு எதிரான உலக அலை:
நேற்றைய முன்தினம் சனிக்கிழமை உலகின் பிரதான தலைநகரங்களில் இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது.
தற்பொழுது லண்டன் பி.பி.சி., அல்-ஜெஸீரா மற்றும் ஏ.எஃப்.பி உட்பட முக்கிய தொலைக்காட்சி ஊடகங்கள் காஸா கலத்தில் நின்று மக்களின் அவலங்களையும், சடலங்களையும் நேரடியாக நிமிடத்துக்கு நிமிடம் ஒளிபரப்புச் செய்துவருவதால், முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்ரேலின் பயங்கரவாத்தை தெளிவாக புரிந்துகொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் தொடர்ந்தும் தனது மிருக வேட்டையை அப்பாவி காஸா மக்கள் மீது தொடருமாயின் ஐரோப்பாவில் மீண்டும் பாரியதொரு ஆர்ப்பாட்டம் அனைத்து மக்களாலும் மேற்கொள்வதை தடுக்கமுடியாதிருக்கும்.
வீரத்தாய்மார்கள்:
கண்மூடி விளிப்பதற்குள் காஸாவில் குறைந்தது 10 பேர் இஸ்ரேலின் ஏவுகணைகளால் ஷஹீதாக்கப்படுகின்றனர். ரமழானில் என்றுமில்லாதவாறு இந்த காஸா மக்கள் குழந்தைகளுடன் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வீடுகள், கடைத்தொகுதிகள் அனைத்தும் இஸ்ரேலால் அழிக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளைப் பராமரிக்க முடியாத நிலையிலும், பெண்களுக்கான மறைப்பு இடங்கள் இல்லாத நிலையிலும் காஸாவிலுள்ள தாய்மார்கள் கண்ணீர் வடித்தாலும், இஸ்ரேலுக்கு எதிராக போராட அல்லது வீரமரணத்தை அடைவதற்து தயாராகவே இருக்கின்றனர் காஸா சகோதரிகளும் தாய்மார்களும்
கண்ணீர் காட்சிகள்:
குழந்தைகளுக்கு முன் தந்தையும், பெற்றோர்களுக்கு முன் பிள்ளைகளும் உடற் பாகங்கள் சிதைவுற்ற நிலையில் இரத்த பூமியில் ஷஹீதாகும் காட்சிகளை பார்க்கும் உள்ளங்கள் கதறியழுகின்றன.
ஹமாஸின் பலம்:
ஆயுத தளபாடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இறைவனின் உதவியால் ஹமாஸ் போராளிகள் தொடர்ந்தும் இஸ்ரேலுக்கு எதிராக நெஞ்சுயர்த்தி போராடி வருகின்றனர். ஹமாஸின் ரொக்கட் தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலையடுத்து இஸ்ரேலிய இராணுவ வீரன் ஒருவனை தாங்கள் பிடித்துவந்திருப்பதாக ஹமாஸ் தொலைக்காட்சியில் கூறப்பட்டது.
பதட்டத்தில் இஸ்ரேல்:
இவ்வாறான அணர்த்தத்தின் காரணமாக இஸ்ரேல் ஆடிப்போயிருக்கின்றது. வான் தாக்குதல் அன்றி தரைமார்க்கமாக இஸ்ரேல் நுழைந்தால், ஹமாஸின் பலம் இஸ்ரேலுக்குப் புரியும். இதனால், வான்வெளித் தாக்குதல்களை மேற்கொண்டே இஸ்ரேல் காஸா மக்களை அழித்து வருகின்றது.
நவீன ஏவுகணை சமிக்கைகள், அயர்ன் டோம் ஏவுகணை எதிர்ப்பு தளங்கள் இருந்த போதிலும் ஹமாஸின் ரொக்கட்டுக்கள் எப்படி இஸ்ரேலுக்குள் வந்து வெடிக்கின்றன என்ற அதிர்ச்சியில் இஸ்ரேலியர்கள் பீதியடைந்திருக்கின்றனர்.
Published by





![irondome[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/irondome1.gif?w=300&h=211)
Leave a comment