பக்தாத்: ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இரு தற்கொலைத் தாக்குதல்களிலும் 27 பேர் கொல்லப்பட்டனர். ஷியா பிரிவினர் அதிகமாக வசிக்கும் பகுதியிலேயே இத்தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அபு அல் கஆகா அல்-அல்மானி, அபு அப்துர் ரஹ்மான் அல்-ஷாமி என்ற இரு இஸிஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே கார் மூலமான இத்தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். எனினும் இவை பொய்ப் பெயர்கள் எனவும், இவர்களுள் ஒருவர் ஜேர்மனியைச் சேர்ந்தவர் எனவும், மற்றையவர் சிரியாவைச் சேர்ந்தவர் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
முதலாவது தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல் இராணுவ சோதனை முகாமில் வெடிக்க வைக்கப்பட்டது. மற்றைய குண்டு பாயா மாவட்டத்தில் வெடிக்கவைக்கப்பட்டிருந்தது.
கொல்லப்பட்டவர்களுள் 4 ஈராக் இராணுவ வீரர்கள் உள்ளடங்குவர். மேலும் 150 பேர் காயமடைந்தனர்.
Published by

Leave a comment