Category: Your Kattankudy
-
‘இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து உருவாக்கியதுதான் இஸிஸ்’
– AF- 90 பக்தாத்: இஸ்ரேல் நாட்டுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸிஸ் என்ற தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவை அலற வைத்துக் கொண்டிருக்கிற ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.
-
அல்ஜீரிய விமானம் மாயம்
– SHM அல்ஜியர்ஸ்: அல்ஜீரிய நாட்டின் விமான நிறுவனமான ஏர் அல்ஜிரி AH 5017 நடுவானில் திடீரென மாயமானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா ஃபோசாவின் தலைநகர் அவாகடோகு நகரில் இருந்து ஏர் அல்ஜிரி விமானம் ஒன்று அல்ஜீரிய நாட்டின் அல்ஜியர்ஸ் நகருக்கு புறப்பட்டது.
-
உணவு விசமானதால் இம்முறை புலமை பரிசல் பரீட்சைக்குத் தோற்றும் 8 மாணவர்கள் வைத்தியசாலையில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கடிச்சோலை பிரதேசத்தில் உணவு விசமானதால் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு றமழான் அன்பளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் அதன் உறுப்பினர்களுக்கு றமழான் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஆரம்ப நிகழ்வு 23-07-2014 நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடியிலுள்ள மட்டு-மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளன தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
-
இஸ்ரேலின் யுத்தநிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஹமாஸ்!
– MJ காஸா: இஸ்ரேலின் தற்காலிக யுத்தநிறுத்த கோரிக்கையை ஹமாஸ் நேற்றிரவு நிராகரித்திருந்தது. இந்த நிராகரிப்பை ஹமாஸ் தலைவர் ஹாலித் மெஸால் உத்தியோகபூர்வமாக தெரிவித்தார். 16 நாட்களாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலின் பின்னர் இஸ்ரேலால் விடுக்கப்படும் இரண்டாவது யுத்தநிறுத்தக் கோரிக்கை இதுவாகும்.
-
விமான பயிற்சி பாடசாலையாக மாறப் போகும் மத்தல விமான நிலையம்
கொழும்பு: திட்டமிடப்படாத அபிவிருத்திக்கு நல்லதொரு உதாரணமாக அமைகிறது மத்தல விமான நிலையம்.மத்தல விமான நிலையத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு விமானிகளை பயிற்றுவிக்கும் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது.
-
தராவீஹ் தொழுபவரைப் பின்பற்றி இஷாஃ தொழுகையை ஜமாஅத்தாக தொழுதல்
– ACJU அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ். எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
-
காஸா நிலவரம்: சவுதி-கட்டார் மன்னர்கள் விசேட சந்திப்பு!
– MJ ஜித்தா: சவுதி அரேபியாவின் மன்னரும், இரு புனித ஆலயங்களின் காவலனுமான அப்துல்லாஹ், கட்டார் அமிர் ஷெய்ஹ் தமிம் பின் ஹமாட் அல் தானியை ஜித்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
-
KCDAயின் ஏற்பாட்டில் இப்தாா் நிகழ்வு
– KCDA கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் அனுசரனையில் இப்தார் நிகழ்வு 2014.07.23ஆந்திகதி புதன்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் KCDAயின் தலைவர் ஜனாப். A.M. அன்வர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
-
தாய்வான் விமான விபத்து 51 பேர் பலி!
– MJ மெகோங்: தாய்வானின் உள்ளுர் விமான சேவையான ட்ரான்ஸ் ஏசியா பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 51 பேர் பலியாகியுள்ளனர். இவ்விபத்து தாய்லாந்தின் பென்கு தீவில் அமைந்திருக்கும் மெகோங் விமான நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
-
இஸ்ரேலுக்கு ஐ.நா. எச்சரிக்கை!
– MJ ஜெனீவா: காஸா போராளிகளை தாக்குகின்றோம் என்ற பின்னணியில் காஸாவில் அப்பாவி பொதுமக்களை கொலைசெய்துவரும் இஸ்ரேலுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் 11 தாய்மார்கள் மரணம்!
– AF-90 லாகோஸ்: நைஜீரியாவில் போக்கோ ஹரம் போராளிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் சிலர் பிள்ளைகளை பறி கொடுத்த அதிர்ச்சியில் மாரடைப்பு, ரத்த அழுத்தம், கோமா உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய செய்திகள் தெரிவிக்கின்றன.