இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று 34 பேர் ஷஹீத்: ஹமாஸின் தாக்குதலில் 2 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி!

israel– MJ

ஜெரூஸலம்: நேற்று சனிக்கிழமை காஸா மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மாத்திரம் குறைந்தது 34 காஸா பொதுமக்கள் ஷஹீதாகி இருக்கின்றனர். மாறாக ஹமாஸ் மேற்கொண்ட பதில் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நேற்றைய 12வது நாளான சனிக்கிழமை மாத்திரம் 34 உயிர்கள் காஸாவில் பிரிந்திருக்கின்றன. இதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 44 காஸா மக்கள் ஷஹீதாகி இருந்தனர்.

12வது நாளாகத் தொடர்ந்த இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரைக்கும் 339 காஸா மக்கள் ஷஹீதாகியுள்ளனர். ஷஹீதாக்கப்பட்டவர்களுள் 77 சிறுவர்கள் உள்ளடங்கும். 2,385 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Published by

Leave a comment