Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் சந்திப்பு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் நேற்று (02.04.2015) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஸ்ரீகொத்தாவில் சந்தித்து விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இலங்கையின் புதிய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.

  • ஒரு ஜனநாயக நாட்டின் தேர்தல் விவாத மேடை

    – MJ லண்டன்: பிரித்தானியாவின் பிரமர் தேர்வுக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி இடம்பெற இருக்கின்றன. இத்தேர்தலில் பிரித்தானியாவின் பிரதான 7 கட்சிகள் போட்டியிடுகின்ற நிலையில் இக்கட்சிகளின் தலைவர்கள், மக்கள் முன்றலில் தங்களது சம கால எதிர்காலத் திட்டங்களை எடுத்துக் கூறுவர்.

  • நான்கு நாள் டெஸ்டுக்கு பரிந்துரை

    லண்டன்: ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்து நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. நியுசிலாந்து அணி மே மாதம் இங்கிலாந்து செல்கிறது. அப்போது டெஸ்ட் போட்டியை 4 நாட்களில் நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் கொலின் கிரேவஸ் பரிந்துரைத்துள்ளார்.

  • சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று திருமணம்

    டில்லி: இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா சௌத்ரியை இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.3) மணக்க உள்ளார். டில்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற வுள்ளது. திருமணத்தை முன்னிட்டு நடைபெறும் இதர சடங்குகள் டில்லியில் புதன்கிழமை நடைபெற்றன.

  • பிரதியமைச்சர் திஸ்ஸ கரலியத்த இராஜினாமா

    கொழும்பு: ஐ.தே.க. அமைச்ச ரொருவரின் அழுத்தம் காரணமாகவே தான் பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக புத்தசாசன பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். புதிய அரசாங்கத்தில் பல சுதந்திரக் கட்சி எம்.பிகளுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.புத்தசாசன பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட திஸ்ஸ கரலியத்த தமது அமைச்சு பொறுப்புக்களை பொறுப் பேற்கவில்லை.

  • “தற்கொலை குறித்து இணையத்தில் தேடினார் விமானி”

    லண்டன்: அல்ப்ஸ் மலைகளில் மோதிய விமானத்தையோட்டிய துணை விமானி, தற்கொலை செய்துகொள்ளும் முறைகள் குறித்தும், விமானக் கட்டுப்பாட்டு அறையின் கதவின் பாதுகாப்பு குறித்தும் இணையத்தில் தேடியுள்ளதாக ஜேர்மன் நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

  • ‘உஸ்ரா ஸயீதா’ (மகிழ்ச்சியான குடும்பம்) மகளிருக்கான இஸ்லாமிய பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் காத்தான்குடி லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யாவின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் 2015 ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள ‘உஸ்ரா ஸயீதா’ (மகிழ்ச்சியான குடும்பம்) என்ற தலைப்பில் மகளிருக்கான இஸ்லாமிய பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு 2015.04.01 புதன் கிழமை காத்தான்குடி மஃஹதுஸ் ஸூன்னா வளாகத்தில் நடைபெற்றது.

  • சம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்திற்கு எதிராக மூதூர் பிரதேச சபையில் தீர்மானம்

    மூதூர் முறாசில் மூதூர்: மூதூர் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள்  சம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள  அனல் மின் நிலையத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்த போதும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்காமையினாலேயே இந்த இழுபறி ஏற்பட்டுள்ளது.

  • நல்லதை செய்தால் விமர்சனங்கள் எம்மை தேடி வரும் சவால்கள்: பிரதியமைச்சா் அமீா் அலி

    எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: மக்கள்  நலனை கருத்தில் கொண்டு  எமது பிரதேசத்திற்கு  நல்லது செய்ய வேண்டுமென்ற நோக்கோடு யாரெல்லாம்  செயற்படுகின்றார்களே அவா்களுக்கு எனது  பூரண ஒத்துழைப்புக்களையயும், உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என சமுா்த்தி விடமைப்பு பிரதியமைச்சா் அமீா் அலி அவா்கள் அண்மையில்  அல்-கிம்மா நிறுவனத்தினால் ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தின் ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதிகளை திறந்து வைத்து உரையாற்றும் போது  தெரிவித்தார்.

  • சீகிரியாவில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்

    கொழும்பு: சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 27 வயதான மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்பி உதய ஸ்ரீ என்ற இந்த பெண் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி அவர் தொழில் புரியும் ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் சுற்றுலாப் பயணம் சென்றிருந்தார்.

  • உலகக்கிண்ண அரையிறுதியில் விளையாட மறுத்த டிவில்லியர்ஸ்: புதிய சர்ச்சை…

    போர்ட் எலிசபெத்: உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி யில் விளையாட தென்னாபிரிக்க அணித் தலைவர் டிவில்லியர்ஸ் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.உலகக் கிண்ணத் தொடரில் தென்னா பிரிக்க அணி அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தென்னாபிரிக்க அணித் தலைவர் டிவில்லியர்ஸ், அரையிறுதிப் போட்டியை புறக்கணிக்க திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை கிரிக்கெட்டில் அரசின் தலையீடு குறித்து ஐ.சி.சி. எச்சரிக்கை

    கொழும்பு: இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசு முறையற்ற வகையில் தலையிட்டால் அது இடைநீக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி) எச்சரிக்கை விடுத்துள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சு இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை அமைத்ததற்கு பதில் அளிக்கும் வகையிலேயே ஐ.சி.சி. நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் இலங்கை கிரிக்கெட் நிறை வேற்றுக் குழுவுக்கு இந்த எச்சரிக்கை கடிதத்தை அனுப் பியுள்ளார்.

←Previous Page
1 … 474 475 476 477 478 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar