“தற்கொலை குறித்து இணையத்தில் தேடினார் விமானி”

german pilotலண்டன்: அல்ப்ஸ் மலைகளில் மோதிய விமானத்தையோட்டிய துணை விமானி, தற்கொலை செய்துகொள்ளும் முறைகள் குறித்தும், விமானக் கட்டுப்பாட்டு அறையின் கதவின் பாதுகாப்பு குறித்தும் இணையத்தில் தேடியுள்ளதாக ஜேர்மன் நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சக விமானியான அண்டிரிஸ் லுபிட்ஸ் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த தொடு கணியை கைப்பற்றிய புலனாய்வாளர்கள், அவர் எந்தெந்த இணையப் பக்கங்களுக்குச் சென்றார் என்பதை கண்டறிந்தனர்.

german pilot

இதேநேரம், விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியை தாம் கண்டறிந்துள்ளதாக பிரன்ஞ்சு விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் வேண்டுமென்றே மலை மீது செலுத்தப்பட்டது என்பதைக் காட்டும் தரவுகள் இந்த கறுப்புப் பெட்டியில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

அண்டிரிஸ் லுபிட்ஸ் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் தனியாக இருந்துள்ளார். தலைமை விமானி கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே சென்றிருந்த சமயம் கதவு சாத்தப்பட்டுள்ளதை விமானியறை ஒலிபதிவுக் கருவி காட்டியுள்ளது.

Published by

Leave a comment