டில்லி: இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா சௌத்ரியை இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.3) மணக்க உள்ளார். டில்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற வுள்ளது. திருமணத்தை முன்னிட்டு நடைபெறும் இதர சடங்குகள் டில்லியில் புதன்கிழமை நடைபெற்றன.
உலகக் கிண்ண தொடரின் பாதியிலேயே ரெய்னா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அவுஸ்திரேலியாவில் இருந்து அவர் நாடு திரும்பியதும் திருமண வேலைகள் வேகமாக நடந்தன. திருமணத்தில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் முடிந்த சில நாட்களில் அவர் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கவுள்ளார். பிரியங்கா சௌத்ரி தற்போது நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார். ரெய்னாவும், பிரியங்காவும் சிறு வயது முதலே நண்பர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
Published by


Leave a comment