பிரதியமைச்சர் திஸ்ஸ கரலியத்த இராஜினாமா

Tissa-Karaliyadda[1]கொழும்பு: ஐ.தே.க. அமைச்ச ரொருவரின் அழுத்தம் காரணமாகவே தான் பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக புத்தசாசன பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். புதிய அரசாங்கத்தில் பல சுதந்திரக் கட்சி எம்.பிகளுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.புத்தசாசன பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட திஸ்ஸ கரலியத்த தமது அமைச்சு பொறுப்புக்களை பொறுப் பேற்கவில்லை.

இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் தமது பதவியை இராஜினாமா செய்தார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், ஐ.தே.க. அமைச்சரின் செயற்பாடு ஜனாதிபதியின் நல்லாட்சி நடவடிக்கைக்கு உகந்ததல்ல என்றும் கூறினார். பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் ராஜினாமா குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் சாந்த பண்டார சிலருக்கு தமக்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவி குறித்து தாழ்வு மனப்பாங்கு காணப்படுகிறது. கெபினட் அமைச்சராக இருந்த தனக்கு பிரதி அமைச்சர் பதவி கிடைத்ததால் இவ்வாறு செய்திருக்கலாம் என்றார்.

Published by

Leave a comment