கொழும்பு: இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசு முறையற்ற வகையில் தலையிட்டால் அது இடைநீக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி) எச்சரிக்கை விடுத்துள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சு இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை அமைத்ததற்கு பதில் அளிக்கும் வகையிலேயே ஐ.சி.சி. நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் இலங்கை கிரிக்கெட் நிறை வேற்றுக் குழுவுக்கு இந்த எச்சரிக்கை கடிதத்தை அனுப் பியுள்ளார்.
அரசின் முறையற்ற தலையீட்டின் விளை வாக இலங்கை கிரிக்கெட் ஐ.சி.சியின் அங்கத்துவத் திலிருந்து இடைநீக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் அரசுக்கும் ஏற் பட்டிருக்கும் விவகாரத்தில் ஐ.சி.சி. ஏற்கக்கூடிய வகை யில் தீர்வுகாணும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஐ.சி.சி. அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, முன்னாள் இலங்கை அணி வீரர் சிதத் வெத்தமுனி தலைமையில் 9 பேர் கொண்ட இடைக் கால சபை ஒன்றை நியமித்தார். இந்த இடைக்கால சபை நேற்று முதல் தனது பணியை ஆரம்பித்தது. விளையாட்டு அமைச்சின் அடுத்த அறிவிப்பு வரும்வரை அல்லது இலங்கை கிரிக்கெட்டுக்கான தேர்தல் நடத்தப் படும் வரை இந்த இடைக்கால சபை இயங்கவுள்ளது.
நியமிக்கப்பட்டிருக்கும் இடைக்கால சபையின் நிர்வாகக் காலம் வரையறுக்கப்படாதபோதும் அது ஆறு மாதங்களுக்கு கூடியதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.சி.சி. உறுப்பு நாட்டு கிரிக்கெட் சபை விவகா ரத்தில் அரசு தலையிடும் பட்சத்தில் அந்த கிரிக்கெட் சபையினை இடைநிறுத்துவதற்கு முடியும் என்று ஐ.சி.சி. கட்டுரை 2.9 (பி) குறிப்பிடுகிறது. இலங்கை கிரிக்கெட் இந்த விதியை மீறும் அச்சுறுத்தல் இருப்பதாக டேவிட் ரிச்சட்சனின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முழுமையான மற்றும் முறையான ஒரு விசாரணை தேவைப்படுவதாயினும் ஏதாவது முறையற்ற தலையீடு, இலங்கை கிரிக்கெட்டின் அங்கத்துவத்தை இடைநீக்கு வதற்கு வாய்ப்பாக அமையும். அவ்வாறான நிலையில் ஐ.சி.சியின் சர்வதேச போட்டிகளில் இலங்கை பங்கேற்கும் உரிமையை இழந்து விடும் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுயாதீனமான வாக்கெடுப்பு இன்றி நியமிக்கப்படும் இடைக்கால சபைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் இரண்டு ஆண்டு களுக்கு முன் விதி ஒன்றை கொண்டு வந்தபோதும் இலங்கை கிரிக்கெட் பல ஆண்டுகளாக இடைக்கால சபை மூலமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையிலுள்ள அனைத்து விளையாட்டு நிர்வா கங்களுக்குமான வாக்கெடுப்புகள் மார்ச் 31 ஆம் திக திக்குள் நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் குறிப் பிட்டபோதும் உலகக் கிண்ண போட்டியால் இலங்கை கிரிக்கெட்டுக்கான வாக்கெடுப்பு ஏப்ரல் கடைசி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே புதிய இடைக்கால சபை நியமிக்கப்பட்டுள்ளது.
Published by
![SRI LANKA CRICKET LOGO[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/sri-lanka-cricket-logo1.jpg?w=150&h=150)
Leave a comment